16 தாலியின் மதிப்பு

952 60 8
                                    

16 தாலியின் மதிப்பு

மறுநாள் காலை நடராஜனுக்கு ஃபோன் செய்வது என்று தீர்மானித்தாள் சக்தி. இப்பொழுது நள்ளிரவு என்பதால் அவன் உறங்கிக் கொண்டிருப்பான். எப்படி பேசுவது, என்ன பேசுவது என்பதை தீர்மானித்துக் கொண்டாள். ருத்ரன் அவள் கழுத்தில் கட்டிய தாலியை உற்று நோக்கினாள். அந்த தாலியை பொருத்தவரை, ருத்ரன் அவளது கணவன். ஆனால் அவளைப் பொருத்தவரை, அது ஒன்றுமே இல்லை. அந்த தாலிக்கு எந்த அர்த்தமும் இல்லை. அவளுக்கே தெரியாமல் கட்டப்பட்ட தாலிக்கு அவள் ஏன் மதிப்பளிக்க வேண்டும்? தேவையில்லை... அது நிச்சயம் நடக்காது. ஆண்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்கள் பெண்களை உணர்ச்சிப்பூர்வமான வழியில் கட்டுப்படுத்தி விட முடியும் என்று நினைக்கிறார்கள். எவ்வளவு நாட்களுக்கு அவர்கள் இப்படிப்பட்ட தந்திரங்களை கையாள போகிறார்கள்? பெண்கள் என்ன அடிமையா? பெண்கள் மதிப்பளித்தால் மட்டும் தான், அந்த தாலி தனக்குரிய மரியாதை பெறுகிறது. இல்லாவிட்டால், அது வெறும் கயிறு தான். இதை தன் கழுத்தில் கட்டியதன் மூலம், தன்னை கட்டி போட்டு விடலாம் என்று நினைக்கிறான் ருத்ரன். அது நிச்சயம் நடக்கப் போவதில்லை.

அவளுக்கு தூக்கம் வந்தது. ஆனால் எங்கு தூங்குவது? அவள் அந்த அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவளை உள்ளே வைத்து வெளிப்புறமாக பூட்டிவிட்டான் ருத்ரன் என்று அவளுக்கு தெரியும். ஆழமாய் யோசித்து விட்டு கட்டிலிலேயே படித்துக் கொண்டாள். அவள் அந்தக் கட்டிலில் படுத்துக்கொண்டாள் தான் என்ன? அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்று ருத்ரன் நினைத்தால், அவள் எங்கு படுத்தாலும் அதை அவன் செய்வான் தானே?

நாளை காலை நடராஜரிடம் பேச வேண்டியதை பற்றி யோசித்தபடி கண்களை மூடிக்கொண்டாள். ஒருவேளை, நடராஜ், ருத்ரன் கூறியபடி இருந்துவிட்டால் என்ன செய்வது? எது எப்படி இருந்தாலும், அதை அவள் எதிர்கொண்டு தான் தீர வேண்டும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு வழி கிடைக்கும். ருத்ரனை தன்னை ஜெயிக்க விடக்கூடாது என்பதில் மட்டும் அவள் தீர்க்கமாய் இருந்தாள்.

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )Where stories live. Discover now