03

2K 178 45
                                    

அரவிந்தை கண்டதும் கீர்த்தனாவின் தோழி.. “ஹே.. உன் ஆளு வந்தாச்சுடீ..” என்றாள் புன்னகையுடன்.

“அவன் கண்டிப்பா வருவான்னு எனக்கு தெரியும்..” என்றவள்.. தன் தோழியிடம்.. “என்னை விட நீ ஓவரா எக்ஸைட் ஆகுற.. இதெல்லாம் சரியில்லையே..” என்றாள் ஓர் அர்த்த பார்வையுடன்.

“அதான் நீங்க இரண்டு பேரும் இன்னும் பேசிக்கவேயில்லையே.. ஆள் வேற நல்லா இருக்கான்.. நாமளும் ரூட்டு போடலாம்னு தான்..” என்றவளை முறைத்தாள் கீர்த்தனா.

“பேசிக்கலைனா கூட நாங்க இரண்டு பேரும்தான்றது உறுதியான விஷயம்.. இன்னொரு தடவை உன் பார்வை என் ஆள் மேல விழுந்துச்சு..” என ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள் கீர்த்தனா.

“சரிதான் போடி..” என அவள் தோழி தலையை திருப்பிக் கொண்டாள்.

இதற்கு மேலும் பார்வையில பேசிக்கிறதெல்லாம் வேண்டாம்னு முடிவு செய்தவளாக.. அரவிந்தை நோக்கி நடக்க தொடங்கினாள்.

அரவிந்தின் பைக் மீது கைவைத்தபடி.. தன் நண்பனிடம் போனில் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்தவனை பார்த்தாள் கீர்த்தனா.

அரவிந்தும்.. என்னவென புருவத்தை உயர்த்தி வினவ.. “உன் பைக் தான..” என்றாள் கீர்த்தனா கேள்வியாக.

“அதுக்கென்ன.. ஊர் சுத்த வரப்போறீயோ..” என அரவிந்த் கேட்டான்.

“வந்தா மாட்டேன்னா சொல்லப்போற..” என கீர்த்தனாவும் கேட்க விழிகள் விரித்தான் அரவிந்த்.

சில நொடிகளில் புன்னகைத்தவன்.. “என்ன திடீர்னு மேடம் பல்லக்குல இருந்து கீழே இறங்கி வந்துட்டீங்க..” என வந்து நின்ற பேருந்தை கண்ணால் காட்டினான்.

“நீ கூப்பிடுவனு பார்த்தேன்.. ம்க்கும் எங்க.. அதான் நானே வந்துட்டேன்..” என கீர்த்தனா சொல்ல புன்னகைத்தவன் அவளுடன் பைக்கில் செல்ல தயாராகினான்.

இருவரும் பார்வையிலே தங்கள் காதலை பரிமாறிக் கொண்டிருந்தனர்.. இப்போது வார்த்தையிலும் பரிமாறிக் கொண்டு ஊர்வலம் செல்கின்றனர்.

காதலின் சங்கீதம்..Where stories live. Discover now