14

2.4K 198 64
                                    

சில மாதங்கள் கடந்து விட்டது. தமயந்தி ரத்தினவேலின் செல்ல சண்டை.. பாலாவின் அன்பு என கங்காவின் வாழ்க்கை இனிதாக நகர தொடங்கியது.

வேலை காரணமாக மதிய உணவுக்கு பாலா வர தாமதமானால்.. கடையில் வைத்து சாப்பிட்டுக் கொள்ளச் சொல்லி அவனை வந்து சாப்பாடை வாங்கிக் கொள்ளச் சொல்வார் தமயந்தி.

இப்போது கங்காவையே நேரில் கொண்டு கொடுத்து வரச் சொன்னார்.

இருவருக்கும் இடையில் நெருக்கம் அதிகரிக்கும் என எண்ணினார் தமயந்தி. ஆனாலும் இருவருக்கும் இடையில் இடைவெளி இருப்பதை அவரால் உணர முடிந்தது.

வேலையில் தன்னால் முடிந்த சின்னச்சின்ன உதவியை செய்தபடி.. பாலாவை சாப்பிட வைத்துவிட்டு.. அவனுடனே பைக்கில் வீடு திரும்புவாள் கங்கா.

எப்போதாவது இருந்த இந்த பழக்கம் அடிக்கடி மாறியது.. அவ்வளவே தமயந்தியின் முயற்சியால் ஏற்பட்ட மாற்றம்..

அவர்கள் விரும்பும் போது வாழ்க்கையை தொடங்கட்டும்.. நாம் அதில் தலையிடுவது சரியில்லை என பாலாவின் பெற்றோர் ஒதுங்கி இருந்தாலும் அவர்களிடம் மாற்றம் தெரிகிறதா என்பதை கவனிக்க தவறவில்லை.

தங்களுக்குள் இருக்கும் இடைவெளியை கடக்க கங்கா பாலா இருவருக்குமே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த சூழ்நிலையில் மணந்து விட்டு.. இப்போது தன்னை பாலாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ.. அதனால் தான் இந்த விலக்கமோ என சில நேரங்களில் கங்காவுக்கு தோன்றும்.

ஆனால் பாலாவின் அன்பும் அக்கறையும் கனிவும் குடும்பத்தில் நிலவிய இயல்பான மகிழ்ச்சியும் அந்த எண்ணம் குறித்து கங்காவை ஆழ்ந்து யோசிக்க விடாமல் செய்தது.

பாலா கங்காவை மணந்து கொண்ட சூழ்நிலை வேறுவிதமாக இருந்த போதிலும்.. தோழியாக இருந்தவளை மனைவியாக உணர தொடங்கினான்.மனைவியாக உணர்ந்து நெருங்க நினைத்தாலும் அவளால் இப்போது தன்னை ஏற்றுக் கொள்ள முடியுமா.. அவள் என்ன மனநிலையில் இருக்கிறாளோ.. என ஏதேதோ தயக்கம் அவனுக்குள்.

காதலின் சங்கீதம்..Dove le storie prendono vita. Scoprilo ora