07

1.8K 164 11
                                    

கீர்த்தனாவை அரவிந்துடன் பார்த்தது முதல் ஆத்திரமாகவும் அருவெறுப்பாகவும் இருந்தது பாலாவுக்கு.

“இதை முதலில் கங்காவிடம் சொல்ல வேண்டும்.. அப்போதாவது அந்த முட்டாளுக்கு புரியட்டும்.. யார் சின்னப் பெண் என்று..” என உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான் பாலா.

பாலா வருவதை பார்த்ததும்.. முகம் மலர அவனருகில் வந்த கங்கா.. “பாலா இன்னைக்கு..” என ஏதோ சொல்ல தொடங்கினாள்.

ஆனால் பாலாவின் முகத்தில் கோபம் தெரியவும் என்னவென புரியாமல்.. “என்னாச்சு பாலா..” என கேட்டாள்.

“சின்னப் பொண்ணு.. சின்னப் பொண்ணுன்னு ஒருத்தியை கொஞ்சிட்டு இருந்தீயே.. அவ என்ன காரியம் பண்ணிட்டு இருக்கா தெரியுமா..” என கோபமாக பேசினான் பாலா.

உண்மையில் அவன் கோபத்திலும் அவன் சொல்லும் விஷயத்திலும் திகைத்து நின்றாள் கங்கா.

“அவளை இன்னைக்கு ஒருத்தனோட.. லா.. லாட்ஜ்ல..” என முழுதாக சொல்லக்கூட முடியாமல் திணறினான் பாலா.

கங்காவுக்கு அவன் சொல்வது புரிய தொடங்க.. அதிர்ந்து நின்றாள்.

“மதன்.. அடிக்கடி அவங்கள அங்க பார்க்கிறதா சொல்றான்.. என்ன சொன்னாலும் அவ சின்னப் பொண்ணு.. சின்னப் பொண்ணுனு சொல்லிட்டு இருந்தீயே.. அவ பண்ற காரியத்தை பார்த்தீயா.. அவ இன்னும் சின்னப் பொண்ணு இல்லை புரிஞ்சுக்கோ..” என்றான்  பாலா.

கங்கா பேச முடியாமல்.. அதிர்ச்சியில் உறைந்து நிற்க.. “இவன் எப்ப பார்த்தான்னு தெரியலையே.. இப்ப எப்டி சமாளிக்கிறது..” என மனதுக்குள் எண்ணியபடி அங்கே வந்தாள் கீர்த்தனா.

பாலா அவளை முறைத்து பார்க்க.. அங்கு நடந்த எதுவும் அறியாதவள் போல நழுவிச் செல்ல கீர்த்தனா நினைக்கையில்.. “கீர்த்தனா நில்லு..” என்றாள் கங்கா.

“எதுக்கு லேட்..” என கேட்டாள் கங்கா.

“அ.. அது.. எக்ஸாம்..” என கீர்த்தனா தடுமாறுகையில்.. பளாரென அவள் கன்னத்தில் அறைந்தாள் கங்கா.

காதலின் சங்கீதம்..Where stories live. Discover now