09

2K 180 29
                                    

நடந்து முடிந்த நிகழ்வுகளின் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல்.. கண்ணீருடன் கீர்த்தனா நின்றிருக்க.. ஈஸ்வரி நகைகளை எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த சமயத்தில் இப்படியா.. என மனம் வெறுக்க.. தவறிழைத்த குற்ற உணர்வுடன் தந்தையின் உடலை பார்த்து.. “அ.. அப்பா..” என கதறினாள் கீர்த்தனா.

“வெளியே போ..” என அலறினான் பாலா கீர்த்தனாவை பார்த்து.

கீர்த்தனா கண்ணீருடன் நின்றிருக்க.. “உனக்கு வேண்டிய எல்லாமே கிடைச்சிடுச்சுல்ல.. கிளம்பு இங்க இருந்து..” என்றான் பாலா அழுத்தமான குரலில்.

தயக்கத்துடன் தந்தை உடலையும் தன் அக்கா கங்காவையும் பார்த்தாள் கீர்த்தனா.

கங்கா எதையும் உணரும் நிலையில் இல்லை.. பாலாவின் சட்டையை இறுக பற்றியபடி.. அதுதான் இனி தன் இடம்.. என்பது போல அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தாள்.

கீர்த்தனாவின் பார்வை கங்கா மீதிருக்க.. “அவ உயிர் மட்டும் தான் இன்னும் இருக்கு.. அதையும் பறிச்சிடாத.. போய்டு..” என பாலா  உறுதியான குரலில் சொன்ன போதும் அதில் வலியிருந்தது.

எதுவும் பேசாமல் அரவிந்த் குடும்பத்தினருடன் கீர்த்தனா வெளியேறினாள்.

“இவ்ளோ நகை.. இன்னும் அந்த வீடு..” என மகிழ்ந்த ஈஸ்வரி கீர்த்தனாவிடம் பாசம் காட்டினார். அது பாசமா நடிப்பா.. என அவர் மட்டுமே அறிவார்.

தன் சட்டையை பற்றியபடியே.. அழுதழுது மயங்கியிருந்த கங்காவின் விரல்களை மெல்ல விடுவித்த பாலா.. தன் அன்னையிடம் அவளை ஒப்படைத்து விட்டு.. சதாசிவத்தின் இறுதி சடங்கினை அவரின் மகனாக.. நிறைவேற்றினான்.

கங்காவின் மயக்கத்தை தெளியவைத்து.. அவளை குளிக்க வைத்து வேறு உடை மாற்ற வைத்திருந்தார் தமயந்தி.

அவர் மடியிலே தலைவைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள் கங்கா.

பாலாவும் ரத்தினவேலும் எதுவும் பேசாமல் அங்கே அமர்ந்திருக்க.. “எல்லோரும் சொன்னீங்களே அத்தை.. நான் தான் கேட்கவேயில்லைல.. அம்மா இறந்தப்ப என் மடியில படுத்துட்டு அழுத அதே சின்னப்பிள்ளையா தான் எனக்கு அவ தெரிஞ்சா..

காதலின் சங்கீதம்..Where stories live. Discover now