13

2.1K 190 44
                                    

வீட்டு பத்திரமும் கங்கா தனக்கு வீடு வேண்டாம் என கையெழுத்திட்ட பத்திரமும் கீர்த்தனா கைக்கு கிடைத்ததும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதாள்.

அப்போதும் அவளிடம் அழாத என ஒரு வார்த்தை கூட சொல்லாமல்.. பத்திரத்தை பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார் ஈஸ்வரி.

கீர்த்தனாவுக்கு வெறுப்பாக இருந்தது. எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

“பாலா கிளம்பிட்டீயா.. சாப்பிட வா..” என அழைத்தாள் கங்கா.

“ஆங்.. இதோ வர்றேன் கங்கா..” என்ற பாலா.. “அப்பா சாப்பிடாங்களா..” என கேட்டான்.

“சாப்பிடுறதா.. அங்க வழக்கம் போல சண்டை நடக்குது..” என சிரித்தாள் கங்கா.

கங்காவின் சிரப்பு மனதுக்கு இதம் தர.. தன் அப்பா அம்மாவின் வழக்கமான செல்ல சண்டையையும் அறிந்திருந்த பாலா இயல்பாக.. “ஏன்.. என்ன விஷயம்..” என கேட்டான்.

“இட்லியும் சாம்பாரும் இன்னைக்கு.. அது யார் பண்ணதுனு தான் பிரச்சனை.. இட்லி கல்லு மாதிரி இருக்கு நீதான் பண்ணிருப்பனு மாமா சொன்னாங்க..

மாவு ஆட்டுனதுல இருந்து இட்லி அவிச்ச வரைக்கும் எல்லா வேலையும் உங்க மருமக தான் அவகிட்ட கேளுங்கனு அத்தை சொன்னாங்க..

அதான இட்லி பூ மாதிரி இருக்கும் போதே தெரியும்.. என் மருமக தான் பண்ணிருப்பானு மாமா சொன்னாங்க..

சாம்பார்ல உப்பில்ல.. அப்ப கண்டிப்பா நீதான் பண்ணிருப்பனு மாமா சொன்னாங்க..

அத்தை.. சாம்பார்ல உப்பு போட மறந்துட்டீயா கங்கானு என்கிட்ட கேட்கிறாங்க.. நான் இந்த விளையாட்டுக்கே வரலைனு இங்க வந்துட்டேன்..” என சிரிப்புடன் சொன்னாள் கங்கா.

“இரண்டு பேருக்கும் வேற என்ன வேலை சொல்லு.. இப்ப நீயும் நடுவில மாட்டிக்கிட்ட..” என சிரித்தான் பாலா.

ரத்தினவேலும் தமயந்தியும் கங்காவின் சிரிப்பு தந்த நிம்மதியில் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருக்கையில் அங்கே வந்தாள் கீர்த்தனா.

காதலின் சங்கீதம்..Dove le storie prendono vita. Scoprilo ora