என் பாரத தாயின் கதறல்

151 27 30
                                    

எனது தேசத்தை
காத்து என்னையும்
காப்பான் என்று தானே
எனது மகனை ஈன்றென்,

ஆனால்....
இன்று என் மகன்
உயிர் நீத்து சருகுகாக....
என்னை சேர்வான் என்று
எனக்கு தெரியவில்லையே.........

எதிரிகளின் போரில்
எனது மகன் போரிட்டு
இறந்தான் என்று கேட்டு
இருந்தால் அகம் மகிழுந்து இருப்பேன்....
உள்ளம் நிறைந்து
இருக்கும்.....

ஆனால் எதிரிகளின்
சதியால் விழுத்தபட்டான்....
என்று கேட்டு எனது தாய்
உள்ளம் கொதிக்கிறது.....
ஊன் வாடுகிறது.......

ஏய்...

எதிரிகளே,
கேட்டு கொள்ளுங்கள்...
என் மகன் உங்களால்
இன்று சதியால்
கொல்லப்பட்டு இருக்கலாம்.....

ஆனால் என்னை
பொறுத்த வரை
மண்ணில் என்னில்
விதையாக விதைக்க
பட்டு உள்ளான்......

நீங்கள் என்னில்
விதைத்த விதை
வளர்ந்து
மரமாகி நாளை.........

உங்களை வேரோடு
கரு அருக்கும்...........
அந்த நாள்,
அந்த நொடியில்,

என் மகனை பெற்ற
பிறவி பயனை,
யான் அடைவேன்,,,...........

என் கவிதைகள்Where stories live. Discover now