பெண் சிசு கொலை

132 19 32
                                    

பெண்ணாய்,
பிறப்பதற்கு நல்ல மாதவம்,
செய்திட வேண்டும் என்றான்
பாரதி.........

நானும் பெண்ணாக,
பிறப்பதற்கு தவம் இயற்றி,
எனது தாயின் கருவறையில்,
சூல் கொண்டேன்.....

எனது அன்னை,
இந்த மகிழ்ச்சியான,
செய்தியை நான் உருவாக, காரணமாக இருத்தவனிடம்,
உரைத்தால்.....

அனைத்தும் நன்றாக,
நன்றாக இருந்தது,
அங்கு தான்,
விதி சிரித்தது......

நான் பெண் என்பதை,
நான் உருவாக காரணமாக, இருந்தவன் அறிந்து,
கொண்டான்....

எனது அன்னையிடம்,
என்னை கருவில் இருந்து,
அழித்தால் தான்,
தன்,
மீதி வாழ்வை.....
அவளுடன் வாழ்வேன்
என்றான்............

ஒன்றும் அறியா

பேதை என் தாய்.......
தானும் ஒரு பெண்,
என்பதை மறந்து,
தன்னில் சூல் கொண்டு,
இருப்பது பெண் என்று,
அறிந்தும் தான்,
வாழ்வை காக்க வேண்டி.....

இவ் மண்ணுலகில்,
பிறக்காத,
என்னை,
என் கண்கள் திறக்கும்,
முன்னரே கல்லறைக்கு,
அனுப்பி வைத்தாள்...

பெண்ணாக கரு
கொண்டது,
என் குற்றமா?
இல்லை என்னை
பெண்ணாக
படைத்த கடவுளின்
குற்றமா?
இல்லை தானும் பெண்
என்பதை மறந்து
தன்
வாழ்வை காக்க என்னை
அழித்த என் தாயின்
குற்றமா?
இல்லை நான்
பெண் என்று தெரிந்து
என் முகம் காணாமலே
அவனை பெற்றதும்
ஒரு தாய் என்பதை மறந்து
என்னை வெறுத்து
அழிக்க காரணமா
இருந்த,
என் தந்தையின் குற்றமா???

பிள்ளை பேறு இல்லை,
என்று ஏங்கும்,
ஏதேனும் ஒரு தாயின்,
கருவறையில்....
நான் சூல் கொண்டு
இருந்தால் .......

என்னை தான்,
பெற்ற வரமாக எண்ணி,
கண்ணின் மணி போல ......
தான் பெற இயலா இன்பத்தை, பெற்றது போல,
என்னை போற்றி பேணி,
பாதுகாத்து,
வளர்த்து இருப்பார்..........

ஆனால் நான் சூல் கொண்டது,
அவளின் கருவறையில்,
அல்லவே......

இவ் உலகம்,
எத்தனைபாரதி,
வந்தாலும்,
எத்தனை,
காந்திகள் வந்தாலும்,
திருத்த போவது,
இல்லை...........
எங்களுக்காக,
வருந்த,
போவதும் இல்லை..........

என் கவிதைகள்Where stories live. Discover now