வரதட்சணை

142 20 29
                                    

திருமணம் என்பது,
வரமா?
இல்லை சாபமா?

பணம் உள்ளவர்களுக்கு,
அது வரம்,
பணம் இல்லாத,
பெண்களுக்கு,
அது சாபம்.......

பணம் இருக்கும்,
பெற்றவர்கள்,
தனது பெண்ணை...
கன்னிகாதானம்,
செய்கிறார்கள்.....

பணம் இல்லா,
பெற்றவர்கள்,
என்னை போன்ற,
பெண்களின்,
இளமை காலத்தை,
தானம் செய்கிறார்கள்.........

அதன் பின்பு.....

எங்களுக்கு கிடைப்பது
முதிர் கன்னி என்ற
பெயர் மட்டுமே....

எனது கனவுகள்
காற்றோடு காற்றாக
கலந்து விட்டது.....

எனது எதிர் கால
கற்பனைகள் மண்ணோடு
மண்ணாக என்னோடு
புதைக்க பட உள்ளது......

நானும் திருமண
வயதில் மணக்கோலம்
காண ஆசை கொண்டேன்.......

ஒருவன் வரதட்சணை....
அளிக்க இயலாது
என்பதை புரிந்து....
மறை முகமாக என்
நிறத்தில் குறை
கண்டான்....

மற்றொருவன் எனது,
தோற்றத்தில் குறை கண்டான்....

மற்றொருவனோ வரதட்சணை
வேண்டாம் என்றான் ....

நானும் எனது வாழ்கைக்கும்
எனது கனவுகளுக்கும்
விடை கிடைத்து
விட்டதாக அகம் மகிழ்தேன்.....

ஆனால் அவனுக்கு
மனைவி தேவை இல்லை....
தனது குழந்தையை....
கவனிக்க தனது காம
இச்சைகளை தீர்க்க
ஒரு பெண் தேவை....

எனது கனவுகளுக்கு
விடை தான்
என்ன.......

இன்று... . 
எனது கேள்விகளுக்கும்
கனவுகளுக்கும்.....
நானே விடையாக.....

முதிர் கன்னியாக
நான்........

என் கவிதைகள்Where stories live. Discover now