வேட்டையையும் வேட்கையும்

23 4 2
                                    

அவள் மனம் ஒன்றும்

கொடியில் பூத்த மலர்

அன்று இதழ் விரித்து

மணம் வீச.....

அவளின் உள்ளம் ஆழ்கடல்

போன்று அமைதியானதும்

அன்று ....

அதில் கண்ணுக்குத் தெரியாத

சுழல்களும் சூட்சமமும்

உண்டு.....

அவள் நெஞ்சில் எரியும்

தீ நீரால் அணையாது

அரக்கர்களின் உயிர்

குடித்துக் கொட்டும்

உதிரத்தில் மட்டுமே

அணையும்.....

உள்ளத்தில் இருக்கும்

வெப்பம்

அணு உலையின் கொதிக்கும்

வெண்மைக்கு நிகரானது.....

காம அரக்கனின் உயிர் குடித்து

வெண்மை மறையுமோ...

இல்லை தகிக்குமோ....

அவளின் மொழிகளை

கொஞ்சும் கிளியுடன்

ஒப்பிடாதே....

அது உன் உயிர்

குடிக்கும் கோடாலியாக

மாறும் கணம்

தெரியும் அவள்

வேட்டையின் தீவிரம்...

வேட்கையின் வீரியம்.....

என் கவிதைகள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang