1

2.7K 58 8
                                    

என்னவோ தெரியவில்லை அன்று சரோஜாவிற்கு ஒரே தலை வலி அவளால் எழுந்து கூட நடக்கமுடியவில்லை எனினும் வழக்கமான அந்த குரல் எழுந்தது "ஏய் சரோஜா சீக்கிரம் தயாராகு இன்னைக்கு புது கஸ்டமர் என்று"தனக்கு ஏற்பட்ட தலைவலியை பற்றி கூறியும் அவளுக்கு ஓய்வு அளிக்கவில்லை அந்த கூட்டத்து தலைவி ராணி, யார் இந்த ராணி?? சரோஜா போன்ற பெண்களை அவ்விடத்தை விட்டு தப்ப விடமால் அவர்களை கண்காணிப்பு பணியை செய்யும் பாதுகாவலாளி . ஆம் அன்று சரோஜாவிற்கு ஓய்வு இல்லை... வழக்கம் போல ஒரு நீல நிற புடவையுடன் தலை நிறைய பூவுடன் உதட்டு சாயம் பூசிக்கொண்டு தயாரானாள்..தயாராகிக்கொண்டே தனது கடந்த காலத்தை சற்று நினைத்து பார்த்தாள்.
மா...நான் காலேஜுக்கு கிளம்புறன் என்ற குரல் சரோஜா என்கிற சாருலதா எழுப்ப அவளுக்கு வேகவேகமாக லஞ்ச் தயார் செய்து வைத்து ஒரு டப்பாவில் அடைத்து பையில் வைத்து "இந்த சாரு மிச்சம் வைக்கமா சாப்பிடு என்று தாய் பாசமாக கூற அதை வாங்கிக்கொண்டு போனவள் தான் திரும்பி வீட்டுக்கு வரவேயில்லை சாருலதாவாக போனவள் சரோஜா என்ற பெயரில் வாழ ஆரம்பித்தாள் ஒரு விலைமாதுவாக.
எப்படி இவளது வாழ்க்கை இவ்வாறு ஆனது ????வாங்க பார்ப்போம்.
சாருலதா பிறந்தவுடன் அவளது பெற்றோரின் வருமை இன்னும் அதிகமானது ,தங்களது செல்ல மகளிற்காக அனைத்தையும் செய்து அழகு பார்த்தனர் அவளது பெற்றோர்.அவள் ஆசைபட்ட இன்ஜினியரிங் படிப்பை கடன் வாங்கி சேர்த்தனர். கந்துவட்டி க்கு பணம் வாங்கி கட்ட இயலாது சாருலதாவின் தந்தை தற்கொலை செய்து கொள்ள,அவளது தாயோ வீட்டுவேலை செய்து சமாளித்து வர,சரியான நேரத்தில் வட்டி கட்டமுடியாமல் போனதால் அந்த கந்துவட்டிகாரன் சாருலதாவை கடத்தி வந்து இவ்வாறு விலைமாதுவாக மாற்றினான். ஆம் அவளை கடத்தி வந்து இங்கே விற்றுவிட்டு தனக்கு தேவையான பணத்தை வாங்கி கொண்டு சென்று விட அன்றுமுதல் அவள் அங்கு சரோஜா என்ற பெயருடன் அங்கு பத்தில் ஒருவளாக வாழ்ந்து வந்தாள். எவ்வளவு முயன்றும் அங்கிருந்து தப்ப இயலவில்லை. அவ்வப்போது தப்ப முயன்று ராணியிடம் மாட்டிக்கொள்ள இப்படியே நாட்கள் நகர்ந்தது.

சாருலதாவின் வாழ்க்கை மாறுமா??அவளது வாழ்க்கை யை யார் மாற்றுவார்???,☺️பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடரும்.

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now