13

844 34 2
                                    

காலேஜுக்கு வந்த சித்து நம் சாருவின் துணிச்சலான செயலை வகுப்பறையில் சொல்லி பாராட்ட வகுப்பில் இருந்த அனைவரும் சாருவை பாராட்ட அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

என்ன எல்லாரும் பாராட்டிட்டு இருக்கீங்க நான் என்ன பன்னேன் என்று கேற்க... அட என்ன டி இப்படி சொல்லிட்ட நம்ப சீனியர் சித்ராவோட கட்டாய கல்யாணம் நிறுத்திட்டியாமே என்று சக தோழிகள் சொல்ல அவளது பார்வை சித்துவின் மேல் சென்றது "நீதான் இதெல்லாம் சொன்னியா"

ம்ம்ம்....

ஓகே.....ஆனால் ஒன்னு எது நடந்தாலும் உன்மூலமா இந்த க்ளாஸ்க்கு தகவல் வந்துடுது.😂😂😂😂

உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் சாரு சொல்லவா...???

சொல்லு....

எனக்கும் அத்தை பொன்னு ராதிகாவிற்கும் நிச்சயம் ஆயிடுச்சு. அவளுக்கும் எனக்கும் நாலு வருஷத்துல கல்யாணம் ஆயிடும். அவ இப்ப ப்ளஸ்1 படிக்கிறா. இந்த முடிவு சரியா தப்பா னு எனக்கு தெரியல இவ்வளவு நாள் இந்த விஷயத்தை மறைச்சதுக்கு சாரி.

ஹாஹா இப்ப எதுக்கு இந்த விஷயம் பத்தி என்கிட்ட சொல்ற எனக்கு தெரியல. ஆனால் ஒன்னு உனக்கு விருப்பம் இருந்தா அவளை கல்யாணம் பன்னிக்க மத்தபடி வேணாம். இங்க பாரு சித்ரா விஷயமும் உன் விஷயமும் வேற . உன்னோட முழு சம்மதத்தோடு தானே நிச்சயம் நடந்தது .???அப்புறம் என்ன???
என்று அவள் கேற்க அவள் கண்களை பார்த்து கொண்டிருந்தான். "சாரு நீ செய்யுற ஒவ்வொரு விஷயமும் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா அதில் ஒரு நியாயமும் இருக்கிறது. இன்னுமும் ஊர் பாசம் ,தோழிகளுக்கு உதவி பன்றது இதெல்லாம் நீ பன்றப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஹாஹா இதெல்லாம் ஒரு விஷயமா சித்து....

காதலிக்கிறவங்களுக்கு காதலி எது பன்னாலும் அழகா தான் தெரியும்😊என்று அவன் மனதில் தோன்ற..ச்ச என்ன இது இப்படியெல்லாம் சிந்தனை வருது. ராதிகாவோட நிச்சயம் ஆனதையே மனசு மறக்கடிக்கடிக்குது இவளை பாக்குறப்ப. காதலை சொல்லவும் முடியாது சொன்னாலும் நல்லாருக்காது.

ஏய் ஏய் சித்து என்னடா எதையோ யோசிக்கிற???

ஒன்னுல .....சரி நான் வீட்டுக்கு கிளம்புறன். என்று பைக்கை கிளப்ப "சித்து என்னை ஹாஸ்டல் ல விட்டுரு "என்று அவன் பின்னே ஏறி அமர்ந்து கொள்ள எந்த சலனமும் இல்லாமல் அவனுடன் எதார்த்தமாக பழகும் சாருவை பார்க்க அவனுக்கு ஆச்சரியம்.

ஏன் சாரு எப்படி என்கிட்ட இவ்வளவு சகஜமா இருக்கமுடியுது என்று அவன் கேட்க "ஹாஹா சித்து...இதுல என்ன இருக்கிறது.. நீ என் ப்ரண்டு அவ்வளவு தானே???

அ....ஆமா அவ்வளவு தான்😊

தொடரும்

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now