12

832 36 3
                                    

சென்னைக்கு வந்தவுடன் தனது ஹாஸ்டலுக்கு சென்றாள் சாருலதா. அங்கு அவளுடைய அறையில் துணிமணிகளும் புத்தகங்களும் சிதறியபடி இருக்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அன்று ஞாயிறு என்பதால் மனோகரியும் சித்ராவும் அறையில் தானே இருப்பார்கள் எங்கு காணோம் என்று யோசிக்க. பக்கத்து அறையில் விசாரிக்க சித்ராவிற்கு கட்டாய கல்யாணம் நடத்த பெரியவர்கள் முடிவு செய்ய அவளை நாசுக்காக குடும்பத்தினர் அழைத்து செல்ல இதை தடுக்க மனோகரி அவர்களை தொடர்ந்து சென்றுள்ளதாக கூற தானும் விரைந்தாள் "ஏய் மனோ நானும் வந்துட்டே இருக்கேன்"...

ஓகே டி உனக்கு லோகேஷன் அனுப்புறன் பாரு .

இருவரும் சித்ரா போகும் காரை பின்தொடர ஒரு மண்டபத்தினுள் கார் நுழைந்தது. அவளை கையை பிடித்து தரதரவென அழைத்து சென்ற ஆட்கள் அங்கிருந்த பெண்களிடம் இவளுக்கு அலங்காரம் செய்து அமரவையுங்கள் என கூற அதற்குள் மனோகரியும் சாருவும் பின்னாடியே செல்ல....... மணமகள் அறைக்கு சென்று தாழிடபட்டது அந்த பெண்களின் கூட்டம்.
மனோகரி - மச்சி இப்ப என்னடி பன்றது இவளை எப்படி டி காப்பாத்துவது??

சாரு - வெயிட் பன்னு பார்ப்போம். இங்கபாரு மணமேடையில் எல்லார் முன்னாடியே கல்யாணம் நிறுத்துவோம் முதல்ல நம்ப போலிஸ்க்கு இன்பார்ம் பன்னிடலாம்.

சிறிது நேரத்தில் மணவரையில் சித்ரா சுறுங்கிபோன முகத்துடன் கண்ணில் கண்ணீர் ததும்ப அமர மனோகரியும் சாருவும் நிற்பதை பார்த்து மன ஆறுதல் பெற....தாலி கட்டும் நேரம் நெருங்க "நிறுத்துங்க "என்று சத்தமிட்டாள் சாரு ....

ஆமா என்ன நடக்கிறது இங்கே ஆங்.....ஒரு காலேஜ் படிக்கிற பொன்னை வலுகட்டாயமா தூக்கி வந்து கல்யாணம் பன்றீங்க ம்ம் முதல்ல கல்யாண பொன்னுக்கு விருப்பம் இருக்கா இல்லையா கேக்கமாட்டிங்கல???நல்லா அவ முகத்தை பாருங்க கண்ணிர் வடியிற முகமாக இருக்கிறது.

ஏய் ஏய் இந்தாடி எங்க வீட்டு பொன்னுக்கு என்ன செய்யனும் செய்மகூடாது னு எங்களுக்கு தெரியும்.

அப்படியா????அது சரி பிடிக்காத ஒரு வாழ்க்கை யை ஏற்படுத்தி குடுக்கிறது பேரு நல்லது பன்றதா....அதுஇருக்கட்டும் உங்க பொன்னு தங்க சிலை மாதிரி இருக்கு. பக்கத்தில் இருக்கிற மாப்பிள்ளை யை கொஞ்சம் பாருங்க "நல்லா 40 வயசு ஆளு மாதிரி இருக்கான்" இவனுக்கு எங்க சித்ரா பொறுத்தமா?????அட அழகை கூட விடுங்க முதல்ல கட்டிக்க போற பொன்னோட சம்மந்தம் முக்கியம். சட்டப்படி ஒரு பெண்ணோட திருமண வயது 21 ஆனால் உங்க பொன்னுக்கு 19 தானே ஆகுது??? எப்படி பார்த்தாலும் ஒத்துவராது. என்று சொல்லி முடிப்பதற்குள் போலிஸ் வர கல்யாணம் நிறுத்தப்பட்டது.

சித்ரா மாலை கழட்டி எறிந்துவிட்டு தன் தோழிகளுடன் சந்தோஷமாக கிளம்ப "ஏய் மச்சிஸ் தாங்க்ஸ் எ..லாட்"என்று சித்ரா தன் தோழிகளை கட்டியணைக்க "யம்மாடி என்னால முடியல ஊர்ல இருந்து நேராக இப்பதான் வந்தேன் விஷயம் கேள்விபட்டவுடனே அப்படியே வந்துட்டன்..பசி உயிரை கொள்ளுது வாங்கடி ஒரு நல்ல ஹோட்டலா போவோம்"

மனோகரி - ம்ம்ம் ஆமாம் டி .....எனக்கு செம்ம பசி . வயிறு கவான் கவான் னு இருக்கிறது.

ஹாஹா சரி சரி வாங்கடி போலாம். ஒன்ஸ் அகெய்ன் தாங்க்ஸ் என்று சித்ரா புன்னகையிக்க. மூவரும் ஹோட்டலுக்கு சென்றனர்.

தொடரும்.

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now