4

1.2K 46 2
                                    

ராகேஷ் சார் அனுப்பிய விலாசத்தை வைத்து அங்கு இறங்கினாள் சாரு. ஹாஸ்டல் வார்டனிடம் அவள் பெயரை பதிவு செய்த எண்ணை காண்பித்து பின்பு அவளுக்கென்று ஒதுக்கபட்ட அறையை நோக்கி நடந்தாள். அறையில் அவள் வயது ஒத்த இரண்டு பெண்கள் ஒருவள் தலைசீவி கொண்டும் இன்னொருவள் பையில் இருந்த துணியை அலமாரியில் வைப்பதுமாக இருக்க...இவள் அவர்கள் அருகே சென்று அறிமுகம் செய்துகொள்ள "ஏய் நீ பர்ஸ்ட் இயர் ஸ்டுணட் ஆ??😊வெல்கம் சாருலதா ,நாங்க இரண்டு பேரும் செகண்ட் இயர் ,என் பெயர் மனோகரி அவள் பெயர் சித்ரா.

ஹாய் மனோகரி அண்ட் சித்ரா...

மூவரும் இயல்பாக பழக ஆரம்பித்தனர். அவள் ஹாஸ்டலுக்கு புதுசு என்பதால் அங்குள்ள விதிமுறைகள் எல்லாம் சித்ரா விளக்க மனோகரியும் சிலவற்றை விளக்க சாருலதாவிற்கு எல்லாம் சவுகரியமாக தெரிந்தது. நாளைல இருந்து க்ளாஸ் ஆரம்பம் என்பதால் சாருலதா தனக்கு தேவையான உடைகளை சிலவற்றை வாங்க வெளியே செல்ல உதவிக்கு மனோகரி சென்றாள்.

சாரு இந்த குர்தி உனக்கு நல்லாருக்கும் டி 😊

மனோ....என் கலருக்கு இதெல்லாம் நல்லாருக்குமா???

அட என்ன சாரு நீ....உன் கலர் சும்மா அள்ளுது நீ லைட் கலர்ஸ் டார்க் கலர்ஸ் எது அணிந்தாலும் நல்லாதாண்டி இருக்கும். நான் மட்டும் பையனா பொறந்துருந்தனு வை...உன்னை அப்படியே அள்ளிட்டு போய் தின்னுருப்பேன்,அவ்வளவு அழகு சாரு நீ😊

நமட்டு சிரிப்புடன் அவளது கடந்த காலத்தை நினைத்தாள்.."தன்னை அள்ளி தின்ற ஆட்கள் எத்தனை பெயர்..ம்ம்ம் நான் மறக்க முயற்சிக்க நினைத்தாலும் நினைவுகளில் அவ்வப்போது வந்து போகிறது அந்த அசிங்கமான வாழ்க்கை"என்று தனக்குள் நினைத்தபடி "மனோ உனக்கு எதாவது ட்ரஸ் வேணும்னா வாங்கிகோ...

வேணாம் சாரு நானும் சித்ராவும் போன வாரம் தான் வாங்கினோம். வா வெளியே போய் பானி பூ சாப்பிட்டு ஹாஸ்டல் போலாம்.சித்ரா ரூம்ல தனியா இருப்பா.

இருவரும் பானி பூரி வாங்கி தின்ன நேரம் போனதே தெரியவில்லை ..ரசித்து ருசித்து அவள் பானி பூரி தின்னும் அழகை தூரத்தில் இருந்தபடி ரசித்தான் சித்து (சித்தார்த்)

சித்துவின் நண்பர்கள் "ஏய் மச்சி அந்த பொன்னும் பர்ஸ்ட் இயர் தான் போல கம்ப்யூட்டர் சைன்ஸ் டிபார்ட்மெண்டு வாயேன் போய் பேசிட்டு வருவோம் என்று கூற...

வேணாம் டா...இப்பவே போய் இன்ட்ரோ பன்னிகிறது அவ்வளவு நல்லா இல்லை நாளைக்கு க்ளாஸ் ல போய் பார்த்துக்கலாம்.

மனோகரி யும் சாருவும் பஸ் ஏறி அமர்ந்தனர். பஸ் புரப்படும் போது சித்துவும் ஏறினான் . மனோகரி யுடன் அவள் பேசுவதையும் தனது நெற்றியோரம் இருக்கும் கூந்தலை ஒதுக்குவதையும் பார்த்து ரசித்தபடியே வந்தான் சித்து (சித்தார்த்).சிலபேரை பார்த்தவுடன் பிடித்துபோகும் அல்லவா அப்படி தான் சாருலதாவை பார்த்தவுடன் சித்துவிற்கு பிடித்துவிட்டது.

சித்து சாருலதாவை காதலிப்பானா??☺️,பார்ப்போம்.

தொடரும்.

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now