11

859 36 6
                                    

வீட்டுக்கு வந்தவுடன் இரவு உணவு சாப்பிட்டு உறங்க சென்றபோது மதுவும் சித்துவும் மற்றும் சாருவும் ஒரே அறையில் உறங்க சென்றபோது அவளுடைய தாய் "ஏய் சாரு நீயும் மாப்பிள்ளை யும் இந்த ரூம்ல தூங்குங்க மது எங்க கூட தூங்கட்டும்"என்று தனிமையை தரும் நோக்கத்தில் அவர் கூற இப்போது தான் சித்துவிற்கு சந்தேகமே வந்தது "ஆமா எனக்கும் சாருவிற்கு ஏன் தனிமையை தர நினைக்காங்க"ஏதோ நடக்குது. "ஏய் சாரு என்ன இதெல்லாம்????

ஸாரி டா சித்து ஆக்சுவலா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு னு அம்மா நம்புறாங்க இப்ப...கூட உன்னை என் புருஷன் நினைச்சு தான் அம்மா இப்படி சொல்றாங்க மத்தது ல நான் அப்புறம் சொல்றனே ப்ளீஸ்.

சரி சரி...மது அப்படினா நீ ஆண்டியோட இன்னைக்கு ஒருநாள் படுத்துக்க நாளைக்கு வேணும்னா எதாவது சொல்லி எஸ்கேப் ஆயிடலாம்.

டேய் அண்ணா இதெல்லாம் நல்லா இல்லை... ராதிகாவுக்கு தெரிஞ்சா ரொம்ப ஃபீல் பன்னுவா அதே போல அம்மாவும் உன்னை நம்பி தான் அனுப்பிருக்கு பாத்துக்க.

இல்லை மது நீ பயப்படுற மாதிரி ஒன்னுல நீ போய் தூங்கு என்று சித்து அனுப்பிவைத்துவிட்டு தாழிடபட்டது . "ப்பா எங்க அம்மாவை எப்படி தான் சமாளிக்க போறனோ என்று சாரு சளித்துகொள்ள "ஏய் சாரு இதெல்லாம் மது சொல்ற மாதிரி சரிபட்டு வராது நாங்க இரண்டு பேரும் காலைல ஊருக்கு கிளம்புறோம் நீ திருவிழா முடிஞ்சு வா.

ம்மஹான் அதெல்லாம் முடியாது திருவிழா முடியுற வரைக்கும் நீ இங்க தான் இருக்கனும். வேணும்னா பக்கத்தில் ரூம் எடுத்து தங்கிக்க அதுக்கு வேணும்னா ஏற்பாடு பன்றேன். உண்மைல இப்படி என் கூட ஒரே அறையில தூங்குறது கஷ்டமா தான் இருக்கும். அதுவும் புருஷனா நடிக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்.😂😂😂

ஹாஹா உனக்காக தான் சாரு நான் இவ்வளவு தூரம் வந்தேன். இப்பகூட என்னை ஏன் உங்க அம்மா மாப்பிள்ளை யா நம்புறாங்க எனக்கு தெரியல. நீ எதையோ மறைக்கிற னு எனக்கு புரிது. ஒரு நண்பனா உன்கிட்ட ஓவரா உரிமை எடுத்து கேக்கவும் முடியாது. அதனால நான் உன்னை எதுவும் கேக்க மாட்டேன் உனக்கே விருப்பம் இருந்தா சொல்லு .

ம்ம்ம்.... அது அவ்வளவு சுலபமாக சொல்லக்கூடிய விஷயம் இல்லை சித்து ஆனால் சொல்ல வேண்டிய நேரம் வரும்போது சொல்றேன்.ஆமா மது ஏதோ ராதிகா ஃபீல் பன்னுவானு சொன்னாளே யார் அது ராதிகா.???😊

ஹாஹா நானும் உன்கிட்ட ஒரு விஷயம் மறைச்சிருக்கன் அதுவும் நேரம் வரும்போது சொல்றன். குட்நைட்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நான்கு நாட்கள் ஊரிலே இருந்துவிட்டு திருவிழா வை முடித்துக்கொண்டு மூவரும் ஊருக்கு கிளம்பும் நிலையில் தங்களது உடைமைகளை காரில் டிக்கியில் வைக்கும் போது சாருவின் லக்கேஜை ராகேஷ் எடுத்துவர "சார் நான் எடுத்துக்குறன் என்று சாரு சொல்ல அவள் கைகளை பற்றிய ராகேஷ் "சாரு ஒருவாட்டி என்னை அப்பா னு கூப்பிட மாட்டியா"???என்று மெல்லிய குரலில் கூற என்ன சொல்வது என்று தெரியாமல் தலைகுனிந்து நின்ற சாரு சற்று சுதாரித்து "நான் உங்களை அப்பானு கூப்பிடுனு னு நினைக்கிறப்பலாம் அன்னைக்கு உங்களை அந்த இடத்தில் பார்த்த ஞாபகம் தான் வருது. என்னை என்ன பன்ன சொல்றீங்க ,,,,,எங்க அம்மாவை கட்டிகிட்டிங்க அப்படிங்கிறதுனால என்னால உடனே எப்படி அப்பா னு கூப்பிட முடியும் சொல்லுங்க ?எனக்கும் மனசுன்னு ஒன்று இருக்கிறது என்று அழத்துவங்கினாள்.

ஸாரி சாருலதா.... அழாதே கிளம்பு சித்து கார் கிளப்புறான். ஏறி உக்காரு மா. ஆனால் ஒன்று நீ அப்பானு கூப்பிடலனாலும் பரவாயில்லை ஆனால் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோ மா. எனக்கு இப்பதான் வாழ்க்கை யே கிடைச்சமாதிரி இருக்கிறது. மனைவி மகள் னு வாழ்க்கை யே அர்த்தமுள்ளதா இருக்கு.

சரிங்க சார் நான் வரேன்..பை.

கார் அவர்களது சாலையை கடக்கும் வரை கையசைத்தார் ராகேஷ். என்றாவது ஒருநாள் தன்னை அப்பா என்று அழைப்பாள் என்ற நம்பிக்கையுடன்.

தொடரும்

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now