9

926 38 2
                                    

சித்து காரை கிளப்பினான்,மதுவும் சாருவும் பின் இருக்கையில் அமர்ந்தனர். மது சாருவிடம் "ஆமா சாரு உங்க ஊர் எவ்வளவு தூரம் எங்கே இருக்கு ????என்று கேற்க "எங்க ஊர் பெயர் ஜெயங்கொண்டம் திருச்சி கிட்ட இருக்கிறது...😊அதுமட்டுமின்றி அங்க ஒரு புகழ்பெற்ற கோவில் ஒன்னு இருக்கு,...
"ப்பா...போதும் போதும் ஒரு கேள்விக்கு இவ்வளவு பெரிய விளக்கமா...என்றாள் மது சிரித்துக்கொண்டே. மூவரும் போற வழியில் ஒரு காபி கடையில் வண்டியை ஓரங்கட்டினர். அண்ணே இந்த காபி ஷாப்ல ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் வேணாம் வேற எங்கயாவது குடிச்சிக்கலாமே என்று கூற...."ஏய் மது கவலை படாத நான் பில் பே பன்னிக்கிறன் என்று சாரு சொல்ல "நம்மளை விட வசதியில் குறைந்தவள் இப்படி பெருந்தன்மையாக நடந்துகொள்வதை பார்க்குறப்ப நம்ப சித்துவிற்கு சாருமீது ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது. "ஏய் சாரு அதெல்லாம் வேணாம் வாங்க நானே பே பன்றன் என்று சித்தார்த் இவர்களை அழைத்து கொண்டு கடையினுள் செல்ல அங்கு ஒருவன் ஏய் சரோஜா என்று கத்துவதை திரும்பி பார்த்தான் சித்து "ஆமா யார் நீங்க ??சரோஜாவிற்கு புது கஸ்டமரா என்று அவன் நக்கலடிக்க....
"என்ன??????சரோஜாவா....ஏய் யார் நினைச்சு யார் ட பேசுற மரியாதையா கோவத்தை கிளப்பாம ஓடிரு. என்றான் சித்தார்த். சற்று நேரத்தில் சாருவிற்கு முகமே வாடியது.

மது - ஏய் சாரு என்ன திடிருனு உன் முகம் வாடுது.

ஒன்னுல மது ...காபி குடிச்சா எல்லாம் சரியாகிடும் லேசா தலைவலி அதான்.

மூவரும் அமர்ந்து காபியை பருகினர்.கோல்ட் காபி கேபர்சினோ என்று வகைவகையான காபியை சுவைத்தனர். சித்துவிற்கு கார் ஓட்டும் களைப்பு போனது.
வாங்க கிளம்பலாம் என்று மீண்டும் காரை செலுத்தினர். பின் இருக்கையில் அமர்ந்தபடி நம்ப சாருலதா அவளது கசப்பான அனுபவங்களை நினைத்துக்கொண்டிருந்தாள். சரோஜா என்கிற அடையாளம் என்று தன்னைவிட்டு மறையுமோ தெரியவில்லை . இன்று முழு சாருலதா வாக இருக்கும் நான் எந்த தவறும் செய்யவில்லை ஆனால் என்றோ சந்தர்ப்பம் சூழ்நிலையில் நடந்த கொடுமையால் எனக்கு விபச்சாரி என்கிற பட்டம் சூட்டிவிட்டனர் சமுகத்தில்... இந்த அடையாளம் என்று மறையும்?????என்றபடி யோசித்துக்கொண்டு வர....கண்ணாடியில் இவள் முகத்தை கவனித்தவன் "ஏய் சாரு என்ன அப்படி யோசனை ...மதுவோட ஜாலியாக எதாவது பேசிட்டு வா"இப்படி உம்முனா வருவ வெளியே வரும்போது. ஊர் திருவிழா க்கு வரமாதிரியா வர,ஏதோ எழவுக்கு வர மாதிரி வர...என்றவுடன் சாருவிற்கு சிரிப்பே வந்துவிட்டது. ம்ம்ம் இப்ப பாரு முகம் எவ்வளவு ப்ரைட்டா இருக்கிறது. என்று சித்து விமர்சிக்க சற்று கலகலப்பான பேச்சுவார்த்தை யில் ஊர் வந்து சேர்ந்தனர் மூவரும்.

காரில் இறங்கிய சாருலதா கேட் திறந்து உள்ளே வர அங்கு அவளுடைய தாய் மஞ்சள் பழக்க பூசிக்கொண்டு நெற்றியில் குங்குமத்துடன் இருப்பதை பார்க்க அவளுக்கு பூரிப்பாக இருந்தது. தன்னுடைய தாயிற்கு விதவை கோலம் அழிந்ததை நினைத்து சந்தோஷபட்டாள். ராகேஷ் உள்ளே இருந்து "வாங்க வாங்க என்று அழைக்க பின்னாடி தொடர்ந்து சித்துவும் மதுவும் உள்ளே நுழைய....வீட்டில் இருந்த வேலைக்காரி திண்பண்டங்கள் உள்ள தட்டை எடுத்துக்கொண்டு வரவேற்றாள்.

மது தன் அண்ணணிடம் "அண்ணா...நம்ப சாரு இம்புட்டு வசதியாவா இருக்கா????சொல்லவே இல்லை...

ஏய் இந்த வசதியெல்லாம் இப்ப தான் அவங்க அம்மா ராகேஷ் சார் கல்யாணம் பன்ன பிறகு தான். ராகேஷ் சாரை இவங்க அம்மா மறுமணம் பன்னிகிட்டாங்க .

ஓ.....ஓ.......ரைட்டு.

ராகேஷ் - சித்து, மது....இது உங்க வீடு மாதிரி திருவிழா முடியுற வரை இங்கே தங்கி எல்லாம் பார்த்துட்டு பொறுமையா போலாம் புரியுதா . ஹாஹா எதுக்கும் சங்கோஜபடாதிங்க சரியா.

மது - ஓகே அங்கிள்.

சித்து - ஓகே அங்கிள்.

அட என்னங்க மாப்பிள்ளை நீங்க மாமனார் போய் அங்கிள் னு சொல்லிட்டு அழகா மாமா னு சொல்லுங்கள் என்று சாருவின் தாய் வெடுக்கென்று சொல்ல சித்துவிற்கும் மதுவிற்கு ஒன்னும் புரியவில்லை.

தொடரும்.

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now