2

1.4K 54 2
                                    

ஏய் சரோஜா வா வந்து நில்லு ...இங்க பாரு புது கஸ்டமர் வந்துருக்கான் ஆளு செம்மையா இருக்கான் துட்டு வேற நிறையா தருவான் பாத்துநடந்துக்கோ புரிஞ்சிதா என்று ராணியின் பேச்சை காதில் வாங்கியபடி அறையினுள் செல்ல அங்கு கஸ்டமர் என்று சொல்லப்படும் நபர் மிஸ்டர் ராகேஷ் அங்கு இருக்க அவள் அதிர்ந்து போனாள்.
"ராகேஷ் சார் நீங்களா????😢

அ....அது வந்து என்ன சாரு நீ இங்கே??என்ன இதெல்லாம்???😢என்று அவர் வினவ

சார் உங்களை கெஞ்சி கேக்குறன் என்ன இங்கே இருந்து கூடிட்டு போயிடுங்க இந்த நரகம் எனக்கு வேணாம் என்று அவள் அழத்துவங்கினாள். சிறிது நேரம் யோசித்தவர் சரி நீ வா இங்க ஒரு குறுக்கு வழி இருக்கிறது அதுவழியா தப்பிச்சு போயிடலாம் என்று அவள் கைகளை பற்றி அழைத்து செல்ல யாருக்கும் தெரியாது அவளை ராகேஷ் காப்பாற்றினார்.

யார் இந்த ராகேஷ்???னு கேட்டா அது ஒரு பெரிய கதை..சாருவோட ஊர்ல மிகவும் செல்வாக்கான ஆளு பொண்டாட்டி புள்ளைங்க யாரும் இல்லாத தனி ஆளு. கெட்டபழக்கம் னு ஒன்னு இருக்கிறது என்றால் அது எப்போவாது இந்த இடத்திற்கு வந்து செல்வது தான் ஆனால் அன்று சாருவை கண்டது தான் அதிர்ச்சி. எப்படியோ ராகேஷ் உதவியுடன் தப்பித்தாள் சாரு.

ராகேஷ் சார் எங்க அம்மா எப்படி இருக்காங்க???என்று அவள் வினவ..நல்லாருக்காங்க னு சொல்ல முடியாது ஏதோ இருக்காங்க இப்ப கூட நீ இந்த மாதிரி னு தெரியாது ஏதோ காதல் விவகாரமா நீ ஊரு விட்டு போயிட்டனு தான் ஊர் நம்புது ...அதனால நீ இதைபற்றி எதுவும் சொல்லாமல் நாசுக்கா உங்கள் அம்மாவை பாத்துட்டு ,இரண்டு நாள் தங்கிட்டு சென்னை கிளம்பு நீ மறுபடியும் படிக்க நான் ஏற்பாடு பன்றேன். உனக்கு இன்ஜினியரிங் சீட் கண்டிப்பாக நான் மறுபடியும் வாங்கி தரேன் புரியுதா😊

சார்...நீங்க எனக்கு இப்படி ஒரு உதவி பன்னுவிங்க னு நான் நினைச்சு கூட பார்க்கல ரொம்ப நன்றி.

நன்றியா...???சாரு மா நீ என் மகள் வயது பெண் ,எனக்கு கல்யாணம் ஆகி மகள் இருந்தா உன் வயசு இருந்துருக்கோம் அப்படி பட்ட உன்னை அந்த இடத்தில் நான் பார்ப்பேனு நினைக்கல பார்த்த அடுத்த நொடி மனசு நொந்துட்டேன் . இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

அவளின் முகத்தை ஏறெடுத்து கூட பார்க்காமல் அந்த இடத்தை விட்டு விலகினான் ராகேஷ். அவளுக்கு ஒரு ஆட்டோவை பிடித்து கொடுத்து அனுப்பிவிட்டு தானும் சென்றான்.

தொடரும்.

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now