3

1.4K 50 2
                                    

ஆட்டோவிலிருந்து இறங்கிய சாருலதா தனது தாயை கண்டதும் துர்க்கம் தாங்காமல் அவரை கட்டி அணைத்து அழத்துவங்கினாள்."மா எப்படி மா இருக்கிங்க???அவளை கோவத்துடன் விலக்கியபடி "இப்ப மட்டும் எதுக்கு டி என்னை பார்க்க வந்துருக்க ?? அதான் யாரோடையோ போனியாமே அவனுடைய இருக்க வேண்டிதான என்று கடிந்து கொண்ட தாயிடம் நடந்த கொடுமையை சொல்லவும் முடியாமல் தாயை சமாதானம் செய்யவும் முடியாமல் திணர பக்கத்து வீட்டு அக்கா மெல்ல வீட்டினுள் நுழைய கண்ணீரை துடைத்து கொண்டு "அக்கா நீங்களா வாங்க வாங்க...

என்னடி இம்புட்டு நாளு இந்த பக்கமே காணோம் ஆத்தி உடம்பு எல்லாம் இளைச்சு போய் நிக்கிரவ...உங்க அம்மா கையாள இரண்டு நாள் நல்லா திண்ணு புள்ள...😊

அதுக்கு தானே அக்கா வந்துருக்கேன் என்றவளை தாய் ஏறிட்டு பார்த்து விட்டு தானே சென்று பக்கத்து கடையில் இரண்டு முட்டையும் பாஸ்மதி அரிசியும் வாங்கி கொண்டு வந்து அவளுக்கு பிடித்த முட்டை பிரியாணி செய்து பறிமாற ஆச்சரியத்துடன் தாயை கண்டவள் "அம்மா...சூப்பர் மா உன் கை பக்குவம் இன்னும் மாறாமல் இருக்கே...

ஹாஹா தாயோட கைபக்குவம் பிள்ளைக்கு பிடிக்காமல் போகுமா என்ன??😊போடி பைத்தியம் நல்லா சாப்பிடு என்று மீண்டும் ஒரு கரண்டி அள்ளி வைக்க.நல்ல ரசித்து ருசித்து உண்டாள் சாருலதா.

தனது தாயிற்கு எதாவது வாங்கி தரவேண்டும் என்று எண்ணியவளுக்கோ அவள் கையிலிருந்த சொற்ப பணத்தை எடுத்து ஒரு புடவை கடைக்கு போனாள் நல்ல அரக்கு கலரில் ஒரு புடவை வாங்கி தனது தாயிற்கு பரிசளிக்க அதை கையில் வாங்கிய தாயிற்கோ கண்ணீரே வந்துவிட்டது. இரண்டு நாள் எப்படியோ தாயுடன் களித்துவிட ராகேஷை போனில் தொடர்பு கொண்டாள்
"சார் நான் சென்னை போக ஏற்பாடு செய்யுறன் சொன்னிங்க அதான்.

ஓ...ஆமா மா நீ பஸ் ஏறி சென்னை இறங்கி நேராக காலேஜ் ஆஸ்டல் அட்ரஸுக்கு போய் இறங்கிடு அட்மிஷன் ஏற்பாடு ஏற்கனவே பன்னிட்டேன். நல்லா படி மா ஆல் தி..பெஸ்ட்.

சார் அப்புறம் இன்னொரு விஷயம்..

என்ன மா??

அது வந்து நீங்க இனி அந்த மாதிரி இடத்துக்கு போக கூடாது . ப்ளிஸ் சார் இவ்வளவு நல்லவரா இருக்கிற நீங்க ஏன் இப்படி போகனும்???நீங்க ஏன் இந்த வயசுல கூட கல்யாணம் பன்னிக்க கூடாது??

கல்யாணம் ஆ???ஹாஹா எது அம்பது வயசுலையா ...அடபோமா...

ஏன் சார் அப்படி சொல்றிங்க ...கண்டிப்பாக உங்களுக்கு னு ஒரு துணை இருந்தா நல்லா தானே இருக்கும்.

ம்ம்ம் சரிமா அதெல்லாம் அப்புறம் பாத்துகலாம். நீ சென்னை கிளம்பு நான் சொல்ற அட்ரஸ் க்கு கரெக்டா போயிடு பணம் நான் உனக்கு அனுப்பி விடுறன் ஓகேவா பை.

பை ராகேஷ் சார். என்று போனை வைத்த அடுத்த நொடி தனது பெட்டி படுக்கையை கையில் எடுத்தவள் "மா நான் கிளம்புறன்....

அடுத்த வாட்டி மாப்பிள்ளை யை கூடிட்டு வா மா என்றவுடன் "ம்ம்ம் என்று உதட்டை பிதுக்கினாள். பாவம் இல்லாத மாப்பிள்ளை க்கு எங்கே போவாள் ."அம்மாடி அடுத்த மாசம் ஊர்ல திருவிழா அதுக்கு நீ கண்டிப்பாக வரனும் என்றவுடன் "சரி மா வரேன் என்று பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சாரு பத்ரம் .....என்று தாயின் குரல் அவளுக்கு ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வை அளித்தது. சாரு சென்னை செல்கிறாள் ஒரு புது மனுஷியாக.

பார்ப்போம் 🌼

அவளுக்கும் மனமுண்டுWhere stories live. Discover now