2

1.7K 64 24
                                    

"அடுத்தபடியாக, கொல்கத்தா தொழிற்சங்கம் சார்பில், இவ்வாண்டின் சிறந்த தொழிலதிபருக்கான விருதினை வழங்க, மாண்புமிகு மத்திய அமைச்சர் ககன்சிங் ரானே அவர்களை அழைக்கிறோம்."

தெளிவான இந்தியிலும் பெங்காலியிலும் அறிவிக்கப்பட்ட செய்தி செவியை எட்டியதும் இதயம் இருமடங்கு வேகத்தில் துடிக்கத் தொடங்கியது அவனுக்கு. அமைச்சர் மேடையேறியதும், அவரிடத்தில் விருதும் சான்றிதழும் கொண்டுசென்றாள் பச்சைநிற லெஹங்கா அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி. அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, மேடைக்குப் பின்னால் ஒளிர்ந்த திரையில் பொன்னிற எழுத்துக்களில் ஆங்கிலத்தில் பெயரொன்று தோன்றியது.

"இவ்வாண்டின் சிறந்த தொழிலதிபர்.. வெங்கட் ஷர்மா!"

தொகுப்பாளர் உற்சாகத்துடன் அறிவிக்க, அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்தது. ஆயினும் வலது மூலையில் ஒரேயொரு முகத்தில் மட்டும் சோக சாயல்.

முகம் ஏமாற்றத்தில் களையிழக்க, அதை மறைக்க முயலாமல் உதட்டை சுழித்துத் தலை கவிழ்ந்தான் ஆதித் நிவேதன். முப்பதை எட்ட எத்தனிக்கும் அந்த வாலிபன் தான் அந்த அரங்கிலேயே இளையவனாக இருந்தான். மற்றவரெல்லாம் நாற்பதிலும் ஐம்பதிலும் நடமாடிக்கொண்டிருக்க, தன் இருபதுகளில் இந்த அரங்கிற்குள் நுழைந்ததே பெரிய சாதனைதான் என்றாலும், அறிவிப்பில் தன் பெயர் கேளாத ஏமாற்றமே இப்போது பெரிதாகத் தெரிந்தது அவனுக்கு. இருப்பினும் அதிலிருந்து உடனே வெளிவந்து, அமைச்சரின் கையால் விருது பெறும் வெங்கட் ஷர்மாவுக்காகக் கைதட்டினான் அவன். ஐம்பது வயது மனிதரான அவர் புன்னகையுடன் விருதைப் பெற்றுக்கொண்டு கையசைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திட, அதைப் படமெடுத்தபடி மின்னின பத்திரிக்கைகளின் கேமராக்கள்.

மேடையிலிருந்து அவர் இறங்கியதும் சென்று கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, அரங்கத்திலிருந்து வெளியே வந்தான் ஆதித். அவனுக்காகவே காத்திருந்த அவனது உதவியாளர் ராஜீவ் வேகமாக அவனிடம் ஓடிவந்தா ன்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now