4

941 52 52
                                    

"ஆதித் கண்ணா!! நான் பாட்டி பேசறேன்.. எப்படிடா இருக்க?"
பாசம் பொங்கிய குரலைக் கேட்டு ஆதித்தின் முகம் புன்னகையில் விரிந்தது.

"நான் நல்லா இருக்கேன் பாட்டி.. சொல்லுங்க!"

"நான் எதுக்காகக் கூப்பிடுவேன்னு என் கண்ணனுக்குத் தெரியாதா? தீபாவளிக்கு வந்துடுவ தானே கண்ணா?"

சிரிக்காமலிருக்க சிரமப்பட்டவாறே, குரலை சீரியஸாக வைத்துக்கொண்டு, "அ.. வரமுடியுமான்னு தெரியலையே பாட்டி.. இங்க வேற வேலை டென்ஷன் ஓவரா இருக்கு. புது ப்ராஜெக்ட் வேற பிட்ச் பண்ணனும். நாளைக்கே மீட்டிங் எல்லாம் ஸ்டார்ட் ஆகுது.." என இழுத்தான் ஆதித்.

எதிர்முனை அமைதியானது.

"என்ன மீட்டிங்?"

பாட்டியின் குரலில் இப்போது குழைவு இல்லை. தேர்ந்த தொழிலதிபர் பேசும் தொனியில் இருந்தது அது. இருக்காதா பின்னே? பர்வதம் க்ரூப்ஸ் என்னும் சாம்ராஜ்ஜியத்தின் ஒற்றை மகாராணி அல்லவா அவர்!? ஆதித்தின் தொழில்துறை குருவாக மட்டுமன்றி, அவனது முதல் பங்குதாரராகவும் அவர்தானே அவன் பக்கம்நின்று இவ்வியாபார உலகினுள் அவனைக் காலடி வைக்கச் செய்தவர்!?

"ஒரு.. ஸ்டீல் இன்டஸ்ட்ரீ ப்ராஜெக்ட் பாட்டி. கப்பல்ல பொருத்துற ப்ரொபெல்லர்ஸ், ஷாஃப்ட்ஸ் எல்லாம் செய்யற ஐடியா. அதனோட டிசைன்ஸ் பத்தி டிஸ்கஷன் ஆரம்பிக்கப் போறோம்."

அதில் பாதி உண்மை, பாதி பொய் இருந்தது.

கப்பல் உதிரிபாகங்கள் செய்யப்போவது உண்மைதான் எனினும், அது அடுத்த மாதத்திற்கான செயற்திட்டங்களில் தான் இருந்தது.

"டீலர் யாரு?"

"ஹார்லிங்டன் பாட்டி.." சட்டென வாய்க்கு வந்த பெயரை சொல்லிவிட்டான் அவன். அது கப்பல் தொழில்நுட்ப நிறுவனம்தான் என்றாலும், கல்கத்தாவில் அவர்களுக்கு வாணிகமில்லை.

பாட்டி அதையே கேட்டார் அடுத்த நொடி.
"ஹார்லிங்டன் கம்பெனி கல்கத்தாவுல பிஸினஸ் பண்றதே இல்லையே?"

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now