43

309 18 9
                                    

"ஸ்வெட்டர் மட்டும் போதுமா.. இல்ல மப்ளரும் வேணுமா? நான் ஜீன்ஸ் பேண்ட் எடுத்துட்டு வரேன்.. அது குளுர் தாங்கும்ல? அப்பாகிட்ட டிக்கெட் இருக்கு; எங்க கைல தரமாட்டேங்கறார்.. தொலைச்சிடுவோமாம். அப்படியே அவர் மட்டும் எல்லா பொருளையும் பாதுகாப்பா வெச்சிருக்கற மாதிரித் தான்! போன வாரம் ஈ.பி. பில்லை எங்கேயோ வெச்சிட்டு அம்மாவை தாளிச்சிட்டு இருந்தார்.."

மூன்று வாரங்கள் கடந்தது தெரியாமல் கடந்துவிட, தனுஷின் இடைவிடா இரவு ஒலிபரப்பை ஸ்பீக்கர்ஃபோன் வழி கேட்டவாறே தனது அஸைன்மெண்ட் பேப்பர்களை சீர்ப்படுத்திக் கொண்டிருந்தாள் தாரா.

"தாரா ஆஷோ, தேர் ஹோ காயே தோ கீ காபீ?"
வெளியே இந்திராணியின் குரல் கேட்க, இலகுவாக தாராவும் குரல்கொடுத்தாள்.

"ஹா அமி ஆஸ்ச்சி! ஏக் முகொர்தோ! பாயேர் ஷாதே கதோ போல்ச்சி!"

தனுஷ் கைபேசியிலேயே ஆச்சரியப்பட்டுப் போனான்.
"அடே! வாரே வா! மூணு மாசத்துல முழு பெங்காலியா மாறிப் போயிட்டியே தாரா!? தூர்தர்ஷன் பாக்குற மாதிரி இருக்கு, நீ பேசறதை பாக்க! ஆமா, இப்ப என்ன கேட்டாங்க.. நீ என்ன சொன்ன?"

"லேட்டாச்சே, இன்னும் சாப்பிடலையான்னு கேட்டாங்க.. தம்பியோட பேசிட்டிருக்கேன், வரேன்னு நான் சொன்னேன்."

"நீ பேசற ஸ்டைல பாத்தா ஏதோ உலக அரசியல் பேசற மாதிரி இருந்தது.. ஆனா கடைசியில சோறு விஷயம்தான் பேசறீங்க. எந்த லேங்வேஜா இருந்தா என்ன, நமக்கு சோறு தானே முக்கியம்!?"

தாரா சிரிக்க, அதற்குள் தனுஷின் பின்னணியில் கதவு தட்டப்படும் சத்தமும், தேவியின், 'அப்பா வந்தாச்சு' என்ற பதற்றக் குரலும் கேட்க, தனுஷ் அவசரமாக அழைப்பை வைத்துவிட, தாரா பெருமூச்சு விட்டாள்.

'இது மட்டும் இன்னும் மாறல..'

"தாரா.. ஆமி க்ளாந்த்தோ! த்ரூதோ ஆஷோ."

"ஆஸ்ச்சி, ஆஸ்ச்சி.."

வேகமாக உணவுக்கூடத்துக்கு வந்தபோது, படியிறங்கி வந்த ஆதித்தின் மீது கொஞ்சம் இடிக்க நேரிட்டது.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now