காதலை 💞தேடி....

875 75 9
                                    

💜💜💜 K💞M 💜💜💜

Part - 1

வானம் மழைத்துளிகளை....
எழுத்துக்களாக கோர்த்து....
பூமிக்கு ஒரு நீண்ட கவிதையை எழுதியது...

அதை படித்ததில் நனைந்து போனவன்...
அவசர அவசரமாக Bike -ஐ
ஓரமாக நிறுத்தி இறங்கினான்....

ஒதுங்கிய இடத்தில்.... ஒரு நவீன Gift Shop இருந்ததை கவனித்தான்...

அதன் கண்ணாடி கதவை தள்ளி உள்ளே ஈரமாக நுழைந்தான்...

ரம்மியமான இசையுடன்... ஒரு வித மயக்கும் வாசனை நிரம்பிய அந்த பெரிய ஷாப்பில் பிரமிப்புடன் ஒவ்வொரு பொருளையும் பார்த்து கொண்டு மெதுவாக நடந்தான்....

Greetings Card... Bouquet மற்றும் பூக்கள் நிரம்பிய பகுதியில் உதயமானாள் ஒரு அழகான
தேவதை 💞....

இவனை பார்த்ததும் துள்ளலாய் ஓடி வந்தவள்.. அவனை கண்டு அழகாய் சிரித்தாள்....

யார் இவள்... தன்னை பார்த்து இப்படி சிரிக்கிறாளே என்று மனதில் நினைத்து கொண்டிருந்தவனை...

ஹாய்!! கதிர் என்று அழைத்தாள்...

இவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை....

என்னோட பேர் எப்படி உங்களுக்கு..

எனக்கு தெரியாமலா?????.....
உங்கள தான் பாக்க வரலாம்னு கிளம்பிட்டு இருந்தேன்....
What a Surprise..... நம்பவே முடியல.... இங்கயே பாத்துட்டேன்...

நீங்க எதுக்கு?? என்ன பாக்கணும்...

தடுமாறி வார்த்தைகள் வந்தன...

உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.

என்ன?

அது...எனக்கு வெக்கமா இருக்கே....என்று குழைந்து பேசினாள்...

எனக்கு ஆர்வமா இருக்கு..
என்ன??னு சொல்லுங்க....

ஐ லவ் யூ... கதிர் என்றாள்...
முகத்தை கைகளால் மறைத்து...

பனிகட்டியில் விழுந்தவனாய்... உறைந்தான்..

என்ன சொல்றிங்க..
உங்கள யாருன்னே எனக்கு தெரியாது...

எனக்கு உங்கள நல்லா தெரியுமே... உங்க பேர் கதிர்...
Computer Engineer...
Private Software Company -ல் வேலை...5 இலக்க எண்ணில் சம்பளம்...

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now