4

296 59 20
                                    

💙💙💙 காதலை💞தேடி..💙💙💙

K💞M Part -4

Office க்கு வந்தவன்...
தன் அறையினுள் வந்து... அமர்ந்து காலை நேர Traffic நெருக்கடியை தாண்டி வந்ததில் ஏற்பட்ட அலுப்பை...

AC குளிரில் நாற்காலியில் சாய்ந்தவாறு ஆசுவாச படுத்தி கொண்டான்....

Intercom ஒலித்தது.. எடுத்து ஹலோ என்றான்...

வந்துட்டியா கதிர் என்றார்...
MD குமரேசன்...

Good Morning Sir...
சொல்லுங்க..

அது ஒண்ணும் இல்ல... கதிர்
என் சொந்த கார பொண்ணு
மக்கள் TV ல Program Producer-a இருக்கானு சொல்லி இருக்கேன்ல...

ஆமா Sir.

அவ Computer சம்மந்தமா...ஒரு
Talk Show பண்ண போறாளாம்..
அது விஷயமா சில...
Computer Personalities கேட்டு இருந்தா...

நான் உன்னையும் suggest செஞ்சேன்..

அத பத்தி Discuss பண்றதுக்காக
அவ வந்திருக்கா... உன்னோட கேபின்னுக்கு அனுப்புறேன்.

சரி.. sir என்றவன்...
கம்ப்யூட்டரை ON செய்து முந்திய நாள் விட்ட இடத்திலிருந்து தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்...

சில நிமிடங்களில் கதவு ஒற்றை விரலால் தட்ட பட்டு, அவன் அனுமதித்ததும் உள்ளே மென்மையான வாசனையுடன் வந்து நின்றவளை, நிமிர்ந்து பார்த்த கதிரின் பார்வை....

அவள் முகத்திலேயே உறைந்து போனது..

💙கற்று வைத்திருந்த எந்த
தற்காப்பு கலையும் உன்னிடம் பலிக்கவில்லை...
சிறு கண்ணசைவில் வீழ்த்தி
விட்டாய்..💙

ஒரு ஆணின் பார்வை பெண்ணின் முகத்தில் தங்கி விட.. அந்த முகத்தின் வசீகரம் மட்டும் காரணமாக இருக்காது...

அதையும் தாண்டி...ஏதோ உள்ளுணர்வால் கட்டி போட பட்டவன்...போல
சிலையென ஆனான்...

தன் அறைக்குள் நுழைந்து புன்முறுவலுடன் நின்ற அவள் முகத்தில் வசீகரம் தாண்டி.. ஒரு கண்ணியமும்.. புத்தியின் சுடரும், எனக்கு நீ உரிய மரியாதை தந்தே ஆக வேண்டும் என்று மௌனமாக அறிவித்தது....

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now