22

255 51 27
                                    

💖வணக்கம் நண்பர்களே...
அதிகமா OS எழுதுறதை பார்த்து Friends கேட்டாங்க ஒரு Long Story போட சொல்லி...

என்ன செய்யலாம் நமக்கு வராதேனு நினைக்கும்போது School Days ல படிச்ச ஒரு கதை நியாபகம் வந்துச்சு....

So அதை மையமா வச்சு.. என்னோட கற்பனையும் கலந்து எழுதுனது தான் காதலை💞 தேடி.. ரொம்ப சோகமான கதையா இருந்தால் மன்னிக்கவும்...இன்னைக்கு Happy ஆக்கிடுவோம்... 💖

--------------------------------

💚🤍💜 காதலை தேடி...💜🤍💚

K💞M Part - 22

15 -ம் தேதி
காலை 6:30 மணி..

வீட்டின் கூடத்தில் பரப்பி வைக்கப்பட்ட பொருட்களை எல்லாம் சரி பார்த்து... கல்யாணமாலை, பூச்செண்டுகள், மனைப்பலகை, அர்ச்சனை பொருட்கள், பழங்கள் என்று ஒவ்வொன்றையும் கையில் வைத்திருந்த List பார்த்து Tick செய்து கொண்டிருந்தார்..முருகன்.

பட்டுப்புடவை சரசரக்க வந்த பார்வதி
என்னங்க... இந்த ஆரத்தோட கொக்கியை போட்டு விடுங்க என்று கழுத்தோரம் நெக்லசை பிடித்தபடி முதுகை காட்டினாள்...

ஆரத்தின் கொக்கியை மாட்டியபடி.... முல்லை💞ய விட உன் அலங்காரம் தான் தூக்கலா இருக்கு... சரி சீக்கிரம் ரெடி ஆகு..முல்ல 💞ரெடியா...?

ரெடி ஆகிட்டு இருக்காங்க... நான் போய் பாத்துட்டு வரேன்...

போய் பாரு... 7 மணிக்கு மேல கார் வந்துடும்.. அதுக்குள்ள ரெடி ஆகிடுங்க...

மாப்ள வீட்டுக்காரங்க வர்றதுக்கு முன்னாடி நாம போய் அவங்கள Receive பண்ணா தான் மரியாதையா இருக்கும் சீக்கிரம்...

என்றவாறு யாருக்கோ Dial செய்தவர் போனை காதில் வைத்து... வாசல் பார்த்து நடந்தார்....

அறைக்கதவை திறந்த பார்வதி...
பட்டுப் புடவை உடுத்தியிருந்தவளை பார்த்து....என்ன முல்ல💞 ரெடியா...?

ம்ம்ம்...

என்ன?டி இன்னும் நெக்லஸ் போடாம இருக்க...

அம்மா!! இந்த செயின் மட்டும் போதும்மா...

கல்யாணப்பொண்ணு ஒரே ஒரு செயினோட தான் இருக்குறதா..?

காதலை 💞 தேடி....#KM StoriesWhere stories live. Discover now