முன்னுரை

704 34 5
                                    

இரு நேர் எதிர் துருவங்கள் ஒரே புள்ளியில் ஒன்றை ஒன்று சந்திக்க நேரிடும் போது என்ன நிகழும்? புயலா? பூகம்பமா?
காதல் கூட சாத்தியம் என்பதே மதுரதியின் கதை சுருக்கம்!!

மது நம் நாயகி. முப்பது வருடங்களாக மது என்றே அழைக்கப்பட்ட, பேரின் மறுபகுதி என்றுமே பொருட்படுத்தப் படாத அவளுக்கு ரதியென்று இன்னொரு பேர் உண்டு என்பதை அவளே மறந்திருந்த அல்லது இந்த சமூகத்தால் அந்த பேர் அவளுக்கு மறுக்கப் பட்டிருக்க அவளை முதன்முதலாக ஒருவன் ரதியாக உணர்கிறான், அவளையும் உணரச் செய்கிறான்.

மதன் நம் நாயகன். ஊருக்கும் உலகுக்கும் மன்மதன். ஆனால் உள்ளுக்குள் மிகவும் சுயக் கட்டுப்பாடு கொண்ட ஒழுக்கமான நல்லவன். இவர் இப்படித் தான், நடிகன் என்றாள் இப்படி, IT என்றாள் அப்படி, டாக்டர் என்றாள் இப்படி, பிசினஸ் என்றாள் அப்படி என பொத்தம் பொதுவாய் நாம் வைத்திருக்கும் எல்லா stereotypes ஐயும் உடைக்கத் தக்க ஒருவன் மதன்.

மன்மதனும் ரதியும் வாழ்க்கையில் சந்தித்துக் கொள்வதும் காதலில் விழுவதும் அந்த காதலை தக்க வைத்துக் கொள்ளப் போராடுவதும் தான் மதுரதி.

மிச்சத்தை டீடெய்லா கதைல பார்க்கலாம்.

இப்படிக்கு

மிருதுளா ❤️

மதுரதி Where stories live. Discover now