பாகம் 6

208 31 4
                                    

இதுவரை இரண்டு முறை அவனை சந்தித்திருந்தும் அவனை சரி வர கவனித்துப் பார்த்ததில்லை மதுரதி. இன்று இவ்வளவு நெருக்கத்தில் அவன் வந்தமர்ந்து அவளை திருமணத்திற்கு கேட்ட போது அவளால் நடப்பது கனவா நிஜமா என்பதை நம்ப முடியாதிருந்தது. நேற்று சாரு அவனை ஹீரோ என்று சொன்ன போது கூட அவள் அதை நம்பவில்லை ஆனால் இன்று கோட்சூட்டில் ஹீரோ போல ஜம்மென்று இருந்தான் மதன். அவன் மீது சென்று மோதிய போது கூட அவளுக்கு ஒரு சலனம் இல்லை ஆனால் இன்று இத்தனை அருகாமையில் அவன் அமர்ந்திருந்ததா, அல்லது அவனது காந்தமாய் இழுக்கும் ஆண்மை மிகுந்த குரலா, பளபளவென்று இருந்த அவன் முகமா, அவன் மீதிருந்து வெளிப்பட்ட அந்த உயர் ரக perfume வாசனையா என்று சரியாக சொல்ல முடியாத ஏதோ ஒன்று அவளை அவன் புறம் கட்டி இழுப்பது போல இருந்தது. அனைவருமே பேயறைந்தாற் போல காணப்பட்டனர். யாரும் பேசவில்லை. அந்த தர்மசங்கடமான சூழ்நிலையை இலகுவாக்கும் முகமாக முதலில் ரேணுகா தான் வாய் திறந்து பேசினாள்.

"காபி போட்டு எடுத்துட்டு வரேன். சாப்பிட்டே பேசலாம். மது உள்ள வாம்மா.." என மதுவை உள்ளே அழைத்து விட்டு தானும் சமையற்கட்டிற்குள் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

மது பின்னாலேயே வரவும் மதுவை கண்டதும் யாருக்கும் கேட்காத குரலில் "என்னடி நடக்குது இங்க? யார்டி இவங்க? எதுக்கு நம்ம வீடு தேடி வந்திருக்காங்க?" என்றாள்.

"எனக்கும் ஒன்னுமே புரியலைம்மா. பேசாம எங்களுக்கு இதுல இஷ்ட்டமில்லைனு நேரடியா சொல்லி அனுப்பிச்சிடலாம்மா. இதென்ன தர்மசங்கடம் நமக்கு. நமக்குன்னே டிசைன் டிசைனா கிளம்பி வரானுங்க" என்றாள் மது தன்னைத் தானே நொந்து கொண்டு.

"பெரிய இடத்து சம்மந்தமாட்டம் தெரியுதேடி. அதெப்படி அப்படி தட்டிக் கழிக்கறது??"

"பெரிய இடம்ங்கறது தான்மா பிரச்சினையே. நமக்கெல்லாம் சின்ன சின்ன இடத்துலயே ஒன்னும் சரிப்பட்டு வரலை. இது எவ்ளோ பெரிய இடம். இப்ப தானே ஆரம்பிச்சிருக்காங்க. போக போக தான் தெரியும் எதுக்கு தூண்டில போட்றுக்காங்கன்னு.." என்றாள் மது.

மதுரதி Where stories live. Discover now