பாகம் 9

198 32 9
                                    

ஏதோ ஒரு வைராக்கியத்தில் வேண்டாம் என சொல்லி விட்டாள் ஆனால் எதையோ ஒன்றை இழந்தது போல மனம் ஏங்கித் தவித்தது. அந்த தவிப்பும் எரிச்சலையே தர 'இது என்ன இது வெட்கம் கெட்டத் தனமாக ஒரு நடிகனுக்காக இப்படி கிடந்து அடித்துக் கொள்கிறது' என தன் எண்ணங்களை தானே கடிந்தும் கொண்டாள். திருமணம் என்பது தடையாக இருந்த போதும் வேறு எந்த ஏற்ற இரக்கங்களும் இல்லாமல் நிம்மதியாக சென்று கொண்டு இருந்த வாழ்க்கையில் ஏன் இவன் குறுக்கே வந்தான் என்று இருந்தது மதுரதிக்கு. ஆனால் வேண்டாம் என்று சொல்லி விட்டால் தூக்கி ஏறிந்து விட்டு போக வேண்டியது தானே எதற்காக இன்னும் அதையே எண்ணி தவித்துக் கொண்டு இருக்கிறாள் என்பது தான் அவளுக்கே புரியவில்லை. முதல் முறையாக மதன் கலந்து கொண்ட நிகழ்ச்சியை தன் செல்ஃபோனில் தேடி பார்த்தாள். அதை தொடர்ந்து பார்த்தால் அவனை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே பிடித்து விடும் போல் தோன்ற பாதியில் அதையும் நிறுத்தினாள். மதுவின் நிலை இப்படி இருக்க ரேணுகாவானால் ஏற்கனவே சம்பந்தி ஆகி விட்டாற் போல தினம் சாரதா அம்மாவோடு தொலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தாள். சிவராமன் கூட நக்கலாய் சொல்லி விட்டார்,

"நீ ஏதோ லவ் பண்றாப்ல அந்த அம்மாகூட மணித்தியாளக் கணக்குல நீ பண்ற அலப்பறை தாங்கலை. நீ அவங்க கூட பேசற பேச்சுல பாதி உன் பொண்ணு அந்த பையன்கிட்ட பேசினாக் கூட இந்த கல்யாணம் நல்லபடியா நடந்துறும்" என்று.

ரேணுகாவானால் எதைப் பற்றியும் கவலைப் படுவதாய் தெரியவில்லை "அது மதுவோட nature ஏ அதான். ஒரு சாதா புடவை வாங்கறதுக்கு கூட ஒரு வாரம் யோசனை பண்ணுவா. அவளுக்கு கொஞ்சம் டைம் தேவை எதுக்குமே. நீங்க ஒன்னும் யோசிக்காதிங்க. இந்த ஜென்மத்துல எனக்கு நீங்க தான் சம்பந்தி உங்க பையன் தான் மாப்பிள்ளை" என அடித்து விட்டாள் சாரதாவிடம் ஃபோனிலேயே.

மதுரதி மதனிடத்தில் முடியாது என்று கூறியது பற்றி அவள் தன் குடும்பத்திடம் தெரிவிக்கவில்லை. அதை அவர்கள் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை. மதன் மூலமாகவே விஷயம் வெளியே வரட்டும் என அவள் காத்திருக்க மதன் அது பற்றி தன் தாயிடம் பகிர்ந்து கொண்டதாயும் தெரியவில்லை. சாரதா எப்பொழுதும் போலவே ரேணுகாவிடம் பேசிக் கொண்டு இருந்தாள். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே இருக்க மதனின் டிரைவர் வந்து வீட்டில் அனைவருக்கும் உடைகள் மற்றும் இனிப்பு, பட்டாசு முதலியவற்றை கொடுத்து விட்டு சென்றார்.

மதுரதி Where stories live. Discover now