பாகம் 5

223 32 17
                                    

அன்று interview முடித்துக் கொண்டு மதன் வீடு திரும்பிய போது கொஞ்சம் தாமதம் ஆனது. அம்மா எப்போதும் போல டைனிங் டேபிள் அருகே ஒரு புத்தகத்தை கையில் வைத்து படித்தபடி மதனுக்காக காத்திருந்தார். வந்து தாயின் அருகே அமர்ந்தவன் "என்னம்மா அந்த பொண்ணோட அட்ரஸ் எதுவும் கிடைச்சுதா??" என்றான்.

"என்னடா வந்ததும் வராததுமா அந்த பொண்ணை பத்தி விசாரிக்கிற? நீ போற வேகத்தை பார்த்தா எனக்கே பயமா இருக்கேடா" என்றாள் அம்மா ஆச்சர்யத்துடன்.

"கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு இவ்ளோ நாளா டார்ச்சர் பண்ண. இப்ப பண்ணிக்கிறேன்னதும் இப்படிங்கற!" குறைப்பட்டான் மதன்.

அவன் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கக் கண்டு "ஆமாப்பா ஆள் அனுப்பி அந்த அர்ச்சகர் மூலமா அட்ரஸ் வாங்கி எடுத்திருக்கேன். நாளைக்கே நம்ம ஆட்களை வச்சு என்ன ஏது என்ன மாதிரி குடும்பம்னு விசாரிச்சுட்டு மேற்கொண்டு என்ன பண்றதுன்னு பார்க்கலாம்" என்றாள் அம்மா.

"அதுக்கு இன்னும் எத்தனை நாள் ஆகும்..." என்று சலித்துக் கொண்டான் மதன்.

"என்னடா இப்படி சலிச்சுக்கற. அதெல்லம் எப்போ எதை செய்யணும்னு எனக்கு தெரியும். நீ கொஞ்சம் அதுவரை பொறுமையாவே இரு. ஆர்வக் கோளாறா எதுவும் பண்ணி ஏதாவது controversy ல மாட்டி வெக்காத"

"ஓஹோ.. முரளி தகவலை குடுத்துட்டானா???" என்றான் மதன்.

"பின்ன நேத்து வரை சுபீக்‌ஷாவை பண்ணிக்க சொல்லி உன்னை convince பண்ணச் சொல்லி நான் அவனை கேட்டுட்டு இருந்தேன். இன்னைக்கி நீ போய் வேற ஒரு பொண்ணுக்கு bouquet நீட்டிட்டு வந்தா அவன் பயப்படுவானா மாட்டானா??"

"அந்த பொண்ணை எனக்கு புடிக்கலை நான் convince ஆகலை. இந்த பொண்ணை எனக்கு புடிச்சிருக்கு நான் மேல proceed பண்ணலாம்னு சொல்றேன். அவ்ளோ தான்!!"

"வேணாம்னாலும் அப்படி பண்ற. வேணும்னாலும் இப்படி பண்ற. எல்லாமே extreme ஆ பண்ற போ.."

இதற்கு அவனிடம் பதில் இல்லை. மதன் மிகவும் தன்மையான அமைதியான பையன் தான். ஆனால் எப்பொழுதுமே தனக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதில் மிகத் தெளிவாக இருப்பான்.

மதுரதி Where stories live. Discover now