பாகம் 7

207 31 9
                                    

மறு நாள் காலை மதன் ஆபீஸில் இருந்தான். எப்பொழுதும் போல ஆபீஸ் சுருசுருப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மதன், முரளியை தன் அறைக்கு வரும் படி அழைத்தான். முரளி உள்ளே நுழைந்ததும்,

"எனக்கு ஒரு பைக்கும் face cover helmet ம் சாயந்தரத்துக்குள்ள வேணும்" என்றான்.

"என்ன விளையாடுறியாடா நீ? Public ல அதுவும் bike ல.." இவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் நெற்றியில் கை வைத்தான் முரளி.

"நான் தான்னு தெரியாத மாரி நான் safe ஆ சத்தம் இல்லாம போய்ட்டு வந்துடுறேன்டா.." என்றான் மதன் நண்பனை கன்வின்ஸ் செய்யும் குரலில்.

"டேய் அந்த பொண்னு இன்னும் உன்னை புடிச்சிருக்குன்னு கூட சொல்லலைடா. அவ கத்தி கித்தி ஊரை கூட்டிறப் போறாடா. புரிஞ்சுக்கோ.."

"அவ அப்படி பண்ண மாட்டாடா. நான் பார்த்துக்குறேன். I know what I'm doing. நீ சும்மா tension ஆகாம எனக்கு ஒரு Bike ஒரு helmet மாத்திரம் ready பண்ணி குடுத்துடு. ப்ளீஸ்டா முரளி..." என்றான்.

அதற்கு மேல் பேசிப் பயனில்லை என்பது புரியவே தலையை இரு புறமும் ஆட்டி "You are absurd madhan" என்று விட்டு வெளியே சென்றான் முரளி.

மதுவுக்கு அன்று வேலையே ஓடவில்லை. எதில் கவனம் செலுத்த முற்பட்டாலும் கடைசியில் நினைப்பு முழுவதும் அவனிடத்திலேயே வந்து நின்றது. முழு நாளும் மிகவும் சோர்வாகவே காணப்பட்டாள் மது.

"என்னடி நாள் பூரா அப்செட்டாவே இருக்க என்ன மேட்டர்?" என்றாள் சாரு கீ போர்டில் தட்டியபடி.

"ஒன்னுல்லடி. லைட்டா தலை வலிக்குது" என்றாள் மது. ஏனோ அதைத் தாண்டி எதையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளும் மனநிலையில் அவள் இருக்கவில்லை.

எதையோ எண்ணி அப்செட்டாக இருக்கிறாள் ஆனால் வெளியில் சொல்ல மறுக்கிறாள் என்பது புரிந்த போதும் மது இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அடிக்கடிக்கு அவள் இப்படி ஆவது தான். மது எப்போதுமே ஒரு மூட் அவுட் பார்ட்டி தான். ஆகவே பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை சாருவும்.

மதுரதி حيث تعيش القصص. اكتشف الآن