பாகம் 2

237 29 8
                                    

அதே நாள் இரவு மதன் தனது காரில் இருந்து இறங்கி வேகமாக வீட்டுக்குள் சென்றான். மதன் சக்கரவர்த்தி பெரிய சினிமா குடும்பம். அப்பா Late Mr. மகேஷ் சக்கரவர்த்தி எண்பதுகளில் பெரிய producer. இப்பொழுது production house மதனின் தலைமையில் இருந்தது. ஆனால் மதனின் சொத்து மதிப்புக்கும் மதனின் பணிவான குணத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அந்த குணத்திற்காகவே சினிமா வட்டாரங்ளில் எப்போதும் மதனுக்கு நல்ல பேர் உண்டு. மதன் எப்போதுமே காலை ஆபீஸ் இரவு வீடு என்று இருந்து விடுவான். Flash light அவனுக்கு எப்போதுமே ஒத்து வராது. நட்சத்திர விழாக்களுக்கான அழைப்புகளை எப்போதுமே பணிவாக மறுத்து விடுவான். ஒரு சில தவிர்க்க முடியாத தனியார் பார்ட்டிகளில் கலந்து கொள்வதோடு சரி. அப்படியிருக்க ஒரு தனியார் பார்ட்டியில் தான் மதனுக்கு அந்த அழைப்பு வந்தது. ஒரு தனியார் தொலைக்காட்சியின் தலைமைப் பதவியில் இருப்பவர் கார்த்திகேயன். மதனைப் பார்க்கிலும் ஒரு பத்து வருடம் மூத்தவராகினும் தொழிலுக்கு அப்பாற்பட்டு எப்போதும் மதனுடன் ஒரு நண்பர் போலவே பழகி வந்தார். கார்த்தியின் சேனலில் திரை பிரபலங்களை வைத்து ஒரு புது நிகழ்ச்சி நடத்த இருப்பதாகவும் அதில் நிச்சயம் மதன் கலந்து கொள்ள வேண்டும் என்பதும் கார்த்தியின் விருப்பம். நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் சேனலில் ஆரம்பித்த போதிலிருந்து கார்த்தியும் மதனிடம் அது பற்றி பேசாத நாள் இல்லை. ஆனால் மதன் முடியவே முடியாது இது அவனது department ஏ கிடையாது என்று அந்த யோசனையை எப்போதுமே முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவான். மதன் நல்ல அழகன். வட இந்திய நடிகன் போன்ற நிறம். ஆறடிக்கு மேல் உயரம். உடற்பயிற்சியால் மெருகேற்றப்பட்ட ஆணழகன் போன்ற உடற்கட்டு. வசீகரமான முகம். Producer என்பதைத் தாண்டி சினிமா உலகில் மதன் சாதிக்க வேண்டும் என்ற ஆசையும் அக்கறையும் கார்த்திக்கு ரொம்பவும் இருந்தது. மதன் பிடி கொடுத்து பேசாததால் கார்த்தி இது தொடர்பாக மதனின் தாயார் சாரதாவை அணுகினார். கார்த்தி கூறிய விஷயம் எப்பொழுதுமே சாரதா அம்மாவின் மனதிலும் ஓடிக் கொண்டிருந்த விஷயமாகவே இருக்க சாரதா அம்மா தன் மகனிடம் அது பற்றி பேசினாள்.

மதுரதி Where stories live. Discover now