பாகம் 4

218 26 6
                                    

ஒரு நிமிடம் ஈ ஆடவில்லை மதுவின் முகத்தில். சற்று நேரத்தில் தன்னிலை உணர்ந்து "சார் யார் சார் அவரு?" என்றாள் மேனேஜரிடத்தில்.

"ஏம்மா யார்மா நீ??" என்றார் பதிலுக்கு மேனேஜர். இந்த பெண்ணுக்கு மதன் சக்கரவர்த்தியை யாரென்று தெரியாதது ஒரு அதிசயம் என்றால் இவளுக்கு ஏன் அவன் பூ கொடுத்து விட்டு போகிறான் என்பது இன்னொரு அதிசயமாய்த் தோன்ற.

என்ன சொல்லுவதென்று தெரியாமல் மது விழிக்க "போம்மா போய் வேலையைப் பாரு" என்றார் அவர்.

மதுவும் தலை ஆட்டி விட்டு வந்து தன் இடத்தில் அமர்ந்து கொண்டாள். அன்றைய நாள் முழுவதும் அவளது மேலதிகாரிகள் அனைவரும் அவளை ஒரு மார்க்கமாகவே பார்த்து விட்டு சென்றார்கள்.

"யார்னே தெரியலைடி. காலைல அந்த ஆளு மேல கோயில்ல தெரியாமல் மோதிட்டேன். என்னை தேடி வந்து வாழ்த்து சொல்லி பூ குடுத்துட்டுப் போறான்" என்று தன் ஒரே தோழி சாருவிடம் மட்டும் நாள் பூராகவும் சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தாள் மது.

"யாரா இருந்தா என்ன? கையைப் புடிச்சா இழுத்தான்? பூ தானே குடுத்தான்??? உன்னை வேணாம்னு சொன்ன ஆம்பளைங்க மத்தில எவனோ ஒருத்தன் உன் பிறந்த நாளும் அதுவுமா உன்னை தேடி வந்து பூ குடுத்து இருக்கான்னா சந்தோஷப் படுவியா... சும்மா புலம்பிட்டே இருக்க.." என்றாள் சாரு.

"ஹ்ம்ம்ம்..." என்றாள் மது பதிலுக்கு அசுவாரஸ்யமாக.

"அடியே ஆனாலும் நீ இன்னைக்கி ஏதோ புதுசா ஒரு திணுசா தான்டி இருக்க. எப்போமே இப்படி லூஸ் ஹேர் விட்டு சாரி கூட இப்படி லூசாவே விட்டு கட்டுடி. நிஜம்மா நீ இன்னைக்கி ரொம்ப அழகா இருக்க" என்று கூறி மதுவுக்கு கையால் திருஷ்ட்டி சுற்றினால் சாரு.

"எப்போதும் பண்ணா எல்லாமே அலுத்து போயிறும்டி. அப்பப்ப பண்ணா தான் எதுக்குமே மதிப்பு" என்று கூறி சலித்துக் கொண்டாள் மது.

"யார் உன்னை என்னல்லாம் சொல்லி இருக்காங்கன்னு எனக்கு தெரியாது. ஆனால் நீ ஒன்னும் அவ்ளோ மொக்கை ஃபிகர்லாம் கிடையாது. Natural ஆ நீ அழகான பொண்ணு தான். ஆனால் என்ன சுத்தமா self confidence இல்லை self care உம் zero ஏனோ தானோனு இருக்க. தலைல தினம் அரை லிட்டர் எண்ணையை வச்சு நடு வகிடு எடுத்து தலையை இறுக்கி பிண்ணிக்க வேண்டியது, புடவை ஜாக்கெட் எல்லாம் அப்படியே முழுசா மூடி போர்த்திக்க வேண்டியது, தோல்ல நீலமா strap வச்ச உங்க ஆத்தா காலத்து hand bag ஒன்னு. மாற வேண்டியது உன்னை சுத்தி இருக்கவங்க கிடையாது. நீ தான்" என்றால் சாரு நிஜமான அக்கறையுடன்.

மதுரதி Where stories live. Discover now