பாகம் 3

241 33 12
                                    

அன்று அவளுக்கு பிறந்த நாள். அதிகாலையிலேயே விழித்துக் கொண்டு குளித்து தம்பி வாங்கி வந்த புடவையை கட்டிக் கொண்டு வெளியே வந்த போது கூடத்திலிருந்த அப்பா எழுந்து வந்து அவளை தலையில் கை வைத்து வாழ்த்தினார். அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சமையலறைக்குள் செல்ல அம்மா அவளுக்கு டிபன் பாக்சில் டிபனும் ஸ்வீட்டும் கட்டிக் கொண்டு இருந்தாள். மதுவைக் கண்டதும் முகம் நிறைய சிரிப்புடன் அவளுக்கு காபியைக் கொடுத்து விட்டு அவளை அள்ளி முகர்ந்தார்.

"Happy Birthday டி. இந்த வருஷம் உனக்கு நல்ல வருஷமா அமையட்டும். சீக்கிரமே கல்யாணம் பண்ணீட்டு நல்லா இரு" என்றாள் அம்மா.

மது அம்மாவிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு காபியை அருந்தி விட்டு வழமைக்கு மாறாக ஆறு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு ஆபீசுக்கு கிளம்பி விட்டாள். இப்பொழுதே சென்றாள் தான் நடையிலேயே கோயிலுக்கு சென்று விட்டு அங்கிருந்து bank ற்கு bus எடுக்க நேரம் சரியாக இருக்கும். சிவராமனின் வீடு அண்ணா நகர் வெஸ்ட்டில் அமைந்து இருந்தது. அங்கிருந்து பாடிக்கு நடந்து செல்லும் தூரம் தான். பிறந்த நாள் ஆகையால் மது திருவல்லீசுவரர் கோயிலுக்கு சென்றாள். அதிகாலையில் கோயில் மிகவும் பவித்ரமாக காணப்பட்டது. அர்ச்சகரும் இன்னும் ஒரு இரண்டு மூன்று வயதில் மூத்த பெண்மணிகளையும் தவிர கோவிலில் சுத்தமாக கூட்டமே இல்லை. அந்த அமைதிக்காகவே கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து கோயிலுக்கு அதிகாலையே வரலாம் என்று நினைத்த படியே அர்ச்சனையை முடித்துக் கொண்டு கோயில் பிரகாரத்தை கண் மூடி சுற்றி வந்தாள் மதுரதி. சுற்றி வந்தவள் எங்கேயோ பார்த்தபடி வந்த மதனின் மீது முட்டி நின்றாள். மோதிய வேகத்தில் கையில் இருந்த தேங்காய் பூ பழம் யாவும் கீழே சிதறியது. யார் மீது யார் மோதியது யார் மீது பிழை என்பது அறியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மாற்றி மாற்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். மதன் குனிந்து அவள் கீழே தவறவிட்ட அர்ச்சனைப் பொருட்களை அவள் அள்ளி எடுக்க அவளுக்கு உதவி செய்தான். அனைத்தையும் சேர்த்து எடுத்தபடி நிமிர்ந்தவள் மறுபடியும் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். மதன் திரைத்துறையில் பிரபலமடைந்த பின்னர் இத்தனை அருகில் அவனை கண்டும் எந்தவொரு சலனமும் முகத்தில் காட்டாது மொத்தத்தில் மேலே மோதியது தவிர்த்து அவனை தனிப்பட்ட முறையில் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத ஒரு பெண் என்றாள் அது இவள் மட்டும் தான். அந்த இடத்தில் அவன் அவளிடம் இருந்து எந்தவொரு attention ஐயும் எதிர்பாராதது உண்மை தான். ஆனால் அதுவே அவனுக்கு ஒரு ஆச்சர்யத்தையும் கொடுக்க அவளை போகவிட்டு அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். திராவிட நிறம், மெல்லிய தேகம், நல்ல உயரம், உயிர்ப்புள்ள பெரிய கண்கள், நெற்றியில் ஒற்றைப் பொட்டு தவிர வேறெந்த செயற்கை அலங்காரமும் இல்லை. சுருண்ட ஈரக் கூந்தலை லூசாக விட்டிருந்தாள். சேலையில் கோயில் சிலை ஒன்று கால் முளைத்து நடந்து செல்வது போல இருந்தாள் அவள்.

மதுரதி Where stories live. Discover now