பாகம் 11

230 34 6
                                    

மது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து ஒரு சில நாட்களிலேயே நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தேரின. மிக நெருக்கமான குடும்ப அங்கத்தவர்களை மட்டும் வைத்து நிச்சயதார்த்தத்தை வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என பெண் வீட்டார் பிரியப்பட எளிமையாகவே நடத்தி விடலாம் என சாரதாவும் அதற்கு இணக்கம் தெரிவித்தார். நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாளே வித்யாவும் அவளது வீட்டுக் காரரும் வந்து சேர மாப்பிள்ளை சினிமா பிரபலம் என்றதும் மறு நாள் நிச்சயதார்த்தத்திற்கு வித்யாவின் புகுந்த வீடு மொத்தமும் வருவதாய் முடிவானது. மதனின் பக்கத்திலிருந்து மதனின் தாய் மாமா குடும்பமும் முரளியின் குடும்பமும் மற்றும் ஊரில் உள்ள ஒரு சில குடும்பத்து பெரியவர்களை மட்டும் சாரதா அழைத்து இருந்தாள்.

வித்யா வீட்டுக்குள் நுழையும் போதே வீடு வெள்ளையடிக்கப்பட்டு சீரியல் லைட்டுக்களாலும் தோரணங்களாலும் ஜோடிக்கப்பட்டு கல்யாணக் கலை பூண்டிருந்தது. அம்மா வேலைக்கு இருவரை அருகில் வைத்துக் கொண்டு பெரிய பெரிய குண்டான்களில் பட்சணங்கள் செய்து அடுக்கிக் கொண்டு இருந்தாள். மது புதுப் புடவை மற்றும் தங்க நகை அணிந்து புதுப் பெண் கோலத்தில் அமர்ந்திருக்க ஒரு முக்காடிட்ட பெண் மதுவின் கை கால்களை மெஹெந்தியால் சிவக்கச் செய்து கொண்டு இருந்தாள். விதுவைக் கண்டதும் அவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

"என்னம்மா தடல்புடல் பண்ணீட்டிருக்க? என் கல்யாணத்துக்கு இது போலல்லாம் செய்யவே இல்லை" என்று விது நகைச்சுவை போல கூறிக் கொண்டு உள்ளே நுழைய,

"வாடி... உனக்கென்ன ராஜாத்தி நீ குடுத்து வச்சவ. திடீர் மணப்பெண் ஆகிட்ட. மதுவுக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்க்கணும்னு நாங்களும் எத்தனை நாளா தவம் கிடந்தோம். இப்போ தான் அவளுக்கு நல்ல காலம் ஆரம்பம் ஆகி இருக்கு" என்று கூறியபடி வந்து அம்மா அவளை ஆரத்தழுவி வரவேற்றாள்.

"ஆனால் புடிச்சாலும் புடிச்சா இத்தனை நாள் பொறுமையா இருந்ததுக்கெல்லாம் சேர்த்து புளியங்கொம்பா இல்ல புடிச்சா உன் பொண்ணு" என்றாள் விது பொறாமையை வெளியே காட்டாமல்.

மதுரதி Where stories live. Discover now