பாகம் 13

466 38 21
                                    

அதன் பிறகும் மது ஒன்றும் அமைதி அடையவில்லை. அன்று இரவு அவனது அருகாமை கொஞ்சம் நிம்மதியாக இருந்ததென்னவோ உண்மை தான் ஆனால் அதன் பின்னரும் இவருவருக்குமான டாம் ஆண்ட் ஜெரி சண்டைகள் ஒன்றும் நிகழாமல் இல்லை. எதையாவது உப்பு சப்பில்லாத விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு மதனோடு சண்டை போடுவதென்பது மதுவுக்கு இப்பொழுதெல்லாம் பழகிப் போன ஒன்றாய் இருந்தது. நம்மை எல்லோரும் மதித்து மரியாதையாக நடத்தினாலும் அந்த வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது போல கொஞ்சம் கூட யோசிக்காமல் தொட்டதுக்கெல்லாம் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பவளை சமாதனாம் செய்யும் அந்த விளையாட்டு மதனுக்கு உற்சாமகாகவே இருந்தது.

மதன் வீட்டில் முழு கல்யாண செலவையும் அவர்கள் ஏற்பதாய் கூற அது மதுவின் தன்மானத்தை சீண்டியது.

"நீங்க எனக்குன்னு செய்றதெல்லாம் சரி தான். ஆனால் அதுக்காக கல்யாண செலவை நீங்க முழுசா ஏத்துக்கறதை என்னால எத்தனைக்கும் ஒத்துக்க முடியாது. எல்லாமே இலவசமா கிடைச்சிட்டா அப்பறம் அதுக்கான மதிப்பு இல்லாமல் போய்டும். உங்க அந்தஸ்த்துக்கு ஏத்தாப் போல ஒரு கல்யாணம் செய்றதுக்கான பண வசதி எங்ககிட்ட இல்லாம இருக்கலாம். ஆனால் நான் இதுவரை சம்பாதிச்ச பணத்தை எல்லாம் என் பேர்ல பேங்க்ல போட்டு வச்சிருக்கேன். ஒரு ஃபிக்ஸ்ட் டெப்பாசிட்டும் இருக்கு. அது இல்லாம கல்யாணத்துக்காக பேங்க்ல லோனும் அப்ளை பண்ணி இருக்கேன். கல்யாண செலவுல பொண்ணு வீட்டுல இருந்து செய்ய வேண்டிய சகலதும் எங்க செலவுல தான் நடக்கும்" என்றாள் முடிவாக.

அவளுக்கென்று இருந்த மொத்தத்தையும் இந்த கல்யாணத்தில் அவள் போடுவதாக சொல்லுவது கொஞ்சம் கஷ்ட்டமாக இருந்த போதும் இனி அவனது எல்லாமே அவளது தானே என்பதை மட்டுமே அப்போதைக்கு மனதில் நிறுத்தி அவள் முடிவுக்கு இணங்கினான் அவன்.

முதலில் திருமணம் மட்டும் செய்து கொள்ளலாம். சினிமாக் காரர்களை அழைத்து அவர்களுக்காக செய்யும் ரிசெப்ஷன் வேண்டவே வேண்டாம். அவர்கள் மத்தியில் தன்னால் வந்து நிற்கவே முடியாது. ரிசெப்ஷனுக்கு எல்லாம் அவளால் செலவு செய்யவும் முடியாது என்று சொல்லி முடியவே முடியாதென மறுத்தவளை இம்முறை மதன் தான் பேசி தன் பக்க நியாயங்களைக் கூறி சம்மதிக்க வைத்தான்.

மதுரதி Where stories live. Discover now