6 | வாழ்க்கை

66 9 7
                                    

      ஊரிலிருந்த அனாதை இல்லத்துக்கு மாதமொரு முறை சென்று, அன்பளிப்புக்களை வழங்கி, அங்குள்ள பிஞ்சு உள்ளங்களுடன் உறவாடி வரும் பழக்கம் ஜன்னாவுக்கு இருந்து வந்தது உண்மை தான். கடந்த இரண்டு மாதங்களாக அதைப் பற்றியே அவள் மறந்து போய்விட்டிருந்தது அப்போது தான் உறைத்தது.

ஏன் மறந்தோம்? என்று யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான், அடுப்பில் வைத்திருந்த கறி கருகும் வாடை ஜன்னாவின் மூக்கை வந்தடைந்தது. உடனே ஓடிச்சென்று அடுப்பை அணைத்து கறியை இறக்கி, அது அடியில் கொஞ்சமே கருகியிருந்ததைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

பின்பு சமையலறையை துடைத்து சுத்தம் செய்தவள், முன் மண்டபத்துக்குச் சென்று ஹனான் வரும் வரை காத்திருக்கச் செய்தாள். இப்போது சில காலமாக அவளுக்குள் மீண்டும் பொங்கியிருந்த அழகுணர்ச்சி காரணமாக வீட்டினுள் ஆங்காங்கே அலங்காரப் போருட்கள் வைக்கப்படிக்க, அவற்றைப் பார்த்து பகற்கனவு கண்டு கொண்டே சோபாவில் அமர்ந்திருந்தாள்.

சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பழைய கடிகாரத்தைப் பார்த்து முகம் சுளித்தவள், அவ்விடத்திற்கு அதை விட வட்ட வடிவக் கடிகாரமொன்று பொருத்தமாயிருக்கும் என்று கணக்கிட்டுக் கொண்டே தனது செல்போனை எடுத்து ஆன்லைனில் தேடத் துவங்கினாள். முக்கால் மணி நேரத்துக்குள் அவளுக்குப் பொருத்தமென்று பட்ட அந்தக் கடிகாரத்தை ஆடர் செய்து விட்டு மீண்டும் வீட்டை இரசிக்கத் துவங்க, சில நிமிடங்களில் அழைப்புமணியின் ஓசை கேட்டது.

ஹனானை எதிர்பார்த்து கதவில் பொருத்தப்ட்டிருந்த, கண்ணாடி கொண்ட சிறிய துளையினால் வெளியே பார்த்து உறுதி செய்து கோண்ட பின்னர் சிறு புன்னகையுடன் கதவைத் திறந்தாள் ஜன்னா. ஹனானும் பதிலுக்கு மெலிதாக முறுவலித்து விட்டு அவளைக் கடந்து உள்ளே செல்லப் போக நொடியில் ஜன்னா அவனது கையைப் பற்றினாள்.

'என்ன?' என்பது போல அவன் ஏறிட, ஒன்றுமில்லை என்று தலையசைத்தாள். தன் கையை உறுவிக் கொண்டு உள்ளே சென்று விட்டான் ஹனான். அவளுக்கோ மனமெல்லாம் கனமாகிப் போனது. ஹனான் அவளிடம் இவ்வாறு நடந்து கொண்டது மிக மிக அரிது. இப்போது ஓரிரு வாரங்களாகத் தான் முகம்பாராமலும் அவள் மீது அக்கறையில்லாதது போலும் நடந்து கொள்ளத் துவங்கியிருந்தான். அவனது இம்மாற்றத்துக்கு அவளது நடத்தை தான் காரணம் என்பதை இன்னும் ஜன்னா உணரவில்லை.

காயம்✔️Where stories live. Discover now