10 | தோழி

40 7 11
                                    

      "ஹயாத்!" தன்னையறியாமலே  உதடுகளுக்கிடையில் இருந்து வெளிப்பட்ட அப்பெயரை ஜன்னாவின் அருகில் நின்றிருந்த ஹனானும் அப்பால் நின்றிருந்த ஹயாத்தும் கூடக் கேட்டனர். ஜன்னாவில் முகத்தில் பரவியிருந்த அதிர்ச்சியின் இரேகைகள் ஹயாத்தின் முகத்தில் இல்லாமலிருந்தது அவளுக்குப் புதினமாகவே இருந்தது.

"ஜன்னா, இவ தான் நான் சோன்ன.." என்று இழுத்த ஹனான்  ஹயாத்தின் மீதான ஜன்னாவின் நிலைக்குத்திய பார்வையை கண்டு கொண்டு சற்றே பயத்துடன், "உள்ள கூட்டிட்டுப் போய் பேசிட்டிருங்க. நான் வந்துடறேன்" என்று நகரப் போனான்.

"எதுக்காக ஓடுறீங்க ஹனான். உங்க வைஃப் ஆகப் போறவ. நீங்களும் தான் வந்து பேசுங்களேன்" சற்றுக் குத்தலாகவே அவளது வார்த்தைகள் வெளிப்பட, மென்று விழுங்கிக் கோண்டு ஹயாத்தை நோக்கியவன், அவளது அதிரச்சியடைந்த விழிகளைக் கண்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.

பின்பு ஹயாத்திடம் திரும்பி, "அவ என் கூட ஏதோ கோபத்துல இருக்கா. நீங்க வாங்க" என்றானே பார்க்கலாம்.

அந்த சில நிமிட இடைவெளியில் இத்தனையும் நடக்க, அவர்களிருவரும் நின்றிருந்த இடம் நோக்கி வந்து சேர்ந்திருந்தாள் ஹயாத். கீழே அமர்ந்து குச்சிகளை அடுக்கி வீடு கட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்த ஹம்தானின் கன்னத்தை ஆசையுடன் கிள்ளியவள் மெதுவாக நிமிர்ந்து ஜன்னாவைப் பார்த்தாள்.

"ஜன்னா.." என்று மென்மையாக, மிக அருகில் கேட்ட தன் உயிர்த்தோழியின் குரலைப் பல வருடங்களின் பின்னர் கேட்ட சந்தோஷமோ குதூகலமோ ஜன்னாவின் முகத்தில் பிரதிபலிக்காது இருந்ததைக் கண்டு சற்றே ஏமாந்து போனாள் ஹயாத். கூடவே சில விநாடிகளின் முன்பு ஹனானுக்கு அவள் கூறிய வார்த்தைகள் மனத்திரையில் எழ, ஏதோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது.

"உள்ள கூப்பிட மாட்டியா ஜன்னா?" என்று மீண்டும் அவளே கேட்க, சட்டெனத் தெளிந்தவள் திடமான ஒரு பார்வையுடன், "உள்ள வாங்க" என்று அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.

காயம்✔️Where stories live. Discover now