13 | துன்பத்துக்குப் பின் இன்பம்

61 7 16
                                    

      கதிரவன் உலகிலிருந்து விடைபெறும் நேரம், இதமான இளம் வெயிலினடியில் முற்றத்தில் கதிரை போட்டு மூன்று தோழியரும் அமர்ந்திருந்தனர். எத்தனையோ வருடங்களுக்குப் பின்னர் அம்மூவரும் மீண்டும் இணைந்திருப்பதால் ஒவ்வொருவரின் மனதிலும் மகிழ்ச்சியும் வியப்பும் ஒரு வகை அமைதியும் தாண்டவமாடின.

ஹயாத் உறங்கியிருந்த சமயம் ஹனானுடன் கதைத்து விட்டு அவனை மீண்டும் வழியனுப்பிய ஜன்னா, அமீராவை உடனே வரும்படி அழைத்திருந்தாள். ஆர்வத்துடன் ஜன்னாவின் அழைப்பை எதிர்பார்த்திருந்தவளும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தாள்.

ஹனானின் விடயம் பற்றி அமீரா ஒன்றும் அறிந்திருக்காததால் அவள் முன்பு அதைப் பற்றி எதுவும் பேசாமல் தவிர்த்தனர் மற்ற இருவரும். பழைய கதைகளை அலசிக் கொண்டிருந்தாலும், ஹயாத் இதன் பிறகாவது மகிழ்ச்சியாக வாழ வேண்டுமே எனும் எண்ணம் தான் ஜன்னாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

"ஹயா.. உனக்கு நல்லதொரு லைஃப் அமைச்சுத் தாரது என் பொறுப்பு" என்று பேச்சு வாக்கில் அமீரா கூற, ஜன்னாவும் ஹயாத்தும் அவளை ஏறிட்டனர்.

"ஆமா, உனக்கு பொருத்தமான லைஃப் பாரட்னரை தேடிக் கண்டுபிடிக்கப் போறேன். நீ இனிமேலும் கஷ்டப்படக் கூடாது" என்றாள் அமீரா. அதற்குப் பதிலாக உணர்ச்சியற்ற புன்னகை ஒன்று மட்டுமே ஹயாத்திடமிருந்து வெளிப்பட்டது.

"உன் சிச்சுவேஷன் எங்களுக்கு நல்லாவே புரியுது. இப்போ தான் ஒரு டாக்சிக் லைஃப்ல இருந்து வெளில வந்திருக்க. இன்னொரு லைஃப ஈசியா ஏத்துக்க முடியாதுங்குற உன்னோட தயக்கமும் புரியுது. ஆனா கடைசி வரை தனியாகவே இருந்துட முடியுமா? நமக்குன்னு யாராவது வேணும் இல்லையா?" என்று கேட்ட ஜன்னாவை அமைதியாக நோக்கிய ஹயாத் பெருமூச்சு விட்டாள்.

"உங்ககிட்ட எல்லாத்தையும் சொன்ன நான் ஒன்ட மட்டும் மறைச்சுட்டேன்" என்று தயக்கத்துடன் குனிந்து கொண்ட ஹயாத், தோழியரின் கேள்வி நிறைந்த பார்வையை எதிர்கொண்டாள்.

காயம்✔️Where stories live. Discover now