9 | முதல் சந்திப்பு

44 8 15
                                    

      பதினெட்டு நாட்கள் கடந்தும் அவர்களது உறவில் எந்த மாற்றமும் தெரியவில்லை. வீடு இத்தனை காலமாக இருந்த தனது பொழிவையே இழந்து மயான அமைதியுடன் வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஹம்தானைப் பாலர் பாடசாலைக்கு சேர்ப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்ததற்கு அடையாளமாக மேசை மீது பரத்தி வைக்கப்பட்டிருந்த கொப்பி, புத்தகங்கள் மட்டும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன. அரைவாசிக் கொப்பிகள் உறை போடப்பட்டும், மீதி அரைவாசி போடாமலும் கிடக்க, ஜன்னாவின் அரவமே அவ்விடமில்லை.

வழக்கம் போல சமையல்கட்டில் ஏறியமர்ந்து கொண்டு ஜன்னலினூடே இயற்கையுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். இல்லையில்லை, இயற்கையை இரசித்தும் இரசிக்காமலும் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள். அவளது முகம் அமைதியாக, ஆனால் வருத்தம் தோய்ந்து காணப்பட்டது.

பதினெட்டு நாட்களுக்கு முன்பு, அன்றிரவு அவள் அழுதழுதே தூங்கிப் போனது ஞாபகம் வந்தது. ஹம்தான் அவளுக்கு முன்பாக உறங்கியிருந்தது சற்று நிம்மதியைத் தந்தது. அதிகாலையில் அலாரம் கூவுமுன்பே  எழுந்து கொண்டவள் மனது சற்றுப் பாரம் குறைந்திருந்தது.

அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவள் கண்களில் முதன்முதலில் பட்டது மண்டபத்தின் நடுவே தொழுது கோண்டிருந்த ஹனான் தான். எதற்காக இங்கே வந்து தொழுகிறான் என்று யோசித்தவாறே குளியலறை சென்று தானும் வுழு செய்து கொண்டு வந்து பஜ்ர் தொழுகையை நிறைவேற்றினாள்.

தான் கொஞ்சம் கூட பொறுப்பற்ற ஒரு தாயாகவும், மனைவியாகவும் நடந்து கொண்டதற்காக மிகவும் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கோண்டிருந்தாள். அப்பொழுது அறைக்குள் வந்த ஹனான் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு தன்பாட்டில் உடை மாற்றித் தயாராகிக் கொண்டு எங்கோ கிளம்ப எத்தனித்தான்.

அதைக் கண்டதும் கடினப்பட்டு வரவழைத்துக் கொண்ட வார்த்தைகளுடன், "இப்போவே.. எங்க போறீங்க? டீ கொண்டு வரட்டா?" என்று கேட்க, கொண்டு வா என்பது போல தலையசைத்து விட்டு தன் வேலையைத் தோடர்ந்தான்.

காயம்✔️Where stories live. Discover now