12 | ஆறிய காயம்

62 7 16
                                    

     ஹயாத் கூறிய கதையைக் கேட்ட பின்பு அவளுக்கு உணவு பரிமாறி உண்ண வைத்து, விருந்தினர் அறையில் ஓய்வெடுக்கச் செய்தாள் ஜன்னா. அதன் பின்னர் வழக்கமாக உணவு உண்ண வீட்டிற்கு வரும் நேரத்தில் ஹனானும் வந்து விட, அமைதியாகவே இருவரும் உணவருந்தினர். ஹம்தான் மட்டும் இடையிடையே ஏதோ கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, அதற்குப் பொறுமையாக ஹனான் பதில் கூறிக் கொண்டிருந்தான்.

அதை இரசிக்கும் மனநிலையில் இல்லாத ஜன்னா தன் மண்டைக்குள் கிறுகிறுக்கும் யோசனைகளை அடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். உணவு உண்டதும், என்றுமில்லாதவாறு பாத்திரங்களையெல்லாம் கழுவி அடுக்க ஹனானும் உதவி செய்தான்.

"விடுங்க நானே செய்றேன்" என்று ஜன்னா கூறிய போது,

"இல்ல சீக்கிரமா இத முடிச்சிட்டுப் போகலாம். உன் கிட்ட நிறையப் பேசனும்" என்று பதில் கூறியவன் அவளுடன் இணைந்தே வேலைகளை முடித்ததும் இருவரும் தங்கள் அறைக்குச் சென்று அமர்ந்தனர். அதன் பிறகு ஹனான் தனது பக்கக் கதையை அவளிடம் கூற ஆரம்பித்தான்.

ஹயாத் அனாதை இல்லத்திற்கு வந்து சேர்ந்திருக்க, அங்கிருந்த எல்லோரும் அவளது கதையை அறிந்து ஒரு குறையுமின்றி அவளை அன்பாகவே கவனித்துக் கொண்டனர். அங்கு அதிகமாக சிறு பிள்ளைகள் தான் இருந்தனர் என்ற போதிலும் கிட்டத்தட்ட இவளது வயதை ஒத்த இன்னும் இரண்டு நாதியற்ற பெண்களும் இருந்தனர்.

தங்களது இளமைக் காலம் தொட்டே ஜன்னாவும் ஹனானும் அந்த அனாதை இல்லத்துக்குச் சென்று உதவிகளைச் செய்து வரும் பழக்கமுள்ளவர்கள். ஏன், அவர்களிருவரும் கூட முதன்முறையாக அங்கு தானே சந்தித்து அறிமுகமானார்கள்?

ஹனான் வேலை செய்யும் இடத்துக்கு அருகில் தான் அந்தக் கட்டடம் இருந்தது. அவனது நண்பன் ஏதோ நன்கொடை ஒன்று கொடுக்க வேண்டுமென்று கூறி அவனையும் அழைத்துச் சென்ற போது மறுக்க மனமின்றிப் போனவன் அன்று தான் முதன் முறையாக சில நாட்களுக்கு முன்பு வந்து சேர்ந்திருந்த ஹயாத்தைக் கண்டான்.

காயம்✔️Donde viven las historias. Descúbrelo ahora