11 | அவள் கதை

48 8 14
                                    

      ஹயாத் சொன்ன கதையைக் கேட்கக் கேட்ட ஜன்னா தனது இதயத்தை யாரோ வந்து இறுக்கிப் பிழிவது போலவும் அதிலிருந்து லீட்டர் லீட்டராகக் குருதி வடிவது போலும் உணர்ந்தாள். அவளது உயிர்த்தோழி தன் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்களை சந்தித்திருப்பது ஏற்றுக் கொள்ளவே கடினமாக இருந்தது.

ஏழு வருடங்களுக்கும் முன்பு அவள் திருமணமாகி அமேரிக்காவுக்குப் பயணம் செய்த போது, விமான நிலையத்துக்கே சென்று அமீராவும் ஜன்னாவும் வலி நிறைந்த விழிகளுடன் அவளை வழியனுப்பிய போது, இவளைத் திரும்பப் பார்க்க முடியாது, ஏன் தொடர்பு கோள்ளவே முடியாது என்று நினைத்தும் பார்த்திருக்கவில்லை.

தொடர்பு கொள்ள முடியாமைக்கான காரணத்தை அவர்களால் அறிய இயலாமல் போயிருக்க, பலரும் தாங்கள் விரும்பியவாறு பற்பலக் காரணங்களை அக்கம்பக்கத்தில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

ஆனால் இப்போது ஹயாத்தின் வாயினாலேயே உண்மையில் நடந்ததைக் கூறக் கேட்ட ஜன்னா அதிர்ந்து போனாள். ஊரில் மிக கௌரவமான குடும்பத்தில் பிறந்த ஒரே மகன் அமேரிக்காவிலேயே உயர்கல்வி கற்று அங்கேயே தொழில் செய்கிறான், சொத்து முழுவதும் அவனுக்குத் தான் என்றெல்லாம் தரகர் ஆசை காட்டியதால் ஹயாத்தை அவளது பெற்றோர் கண்மூடித்தனமாக அவனுக்குக் கட்டி வைத்து விட்டனர்.

அவனது மனைவியாக அமேரிக்கா சென்ற சில நாட்களின் பின்பு தான் அவன் எத்தகைய பொறுக்கி என்பதை அறிந்து கொண்டாள் ஹயாத். வெட்கங்கெட்டு ஒரு பெண்கள் வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டிருந்தான் அவன். எவ்வளவு படித்து நல்ல நிலையில் இருந்த போதிலும், மார்க்க அறிவு கொஞ்சம் கூட இருக்கவில்லை.

மது, மாது, சூது என்று நிரம்பியிருந்த அவன் வாழ்வெனும் பாதாளக்குழியில் தெரிந்தோ தெரியாமலோ ஹயாத் எனும் மான்குட்டி தள்ளப்பட்டு விட்டாள். அந்தப் பள்ளத்தாக்கின் இடையில் சரி நடுவில் சிக்கிக் கொண்டு மேலே ஏறவும் முடியாமல் கீழே விழவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அப்பேதை.

காயம்✔️Where stories live. Discover now