8 | யோசனை

50 8 11
                                    

     இரவு நேரத்தில் வழக்கமாக உலா வரும் வண்டுகளின் பேச்சுக்குரலோடு சேர்ந்து மணிக்கூடுகளின் டிக் டிக்கென்ற இதயத்துடிப்பும், சமையலறையின் தண்ணீர்க் குழாயிலிருந்து நொடிக்கொரு துளியென வடிந்து கொண்டிருந்த நீர்த்துளிகளும் மட்டுமே ஒலியெழுப்பிக் கொண்டிருக்க, சாமப்போழுதின் நிசப்தம் எங்கும் குடிகொண்டிருந்தது.

தனது நெஞ்சின் மீது யாரோ பாறாங்கல்லொன்றை வைத்து அமுக்குவது போல கனவு கண்ட ஜன்னா திடுக்கிட்டுக் கண் விழித்தாள். தான் இவ்வ்ளவு நேரமும் சமையலறையின் தரையில் உறங்கியிருந்தது சிந்தையை மெல்லத் தொட, சில கணங்களில் எழுந்தமர்ந்தாள். விளக்கு எரிந்து கொண்டே இருந்ததால் நேரத்தைப் பாரக்க இலகுவாயிற்று.

அதிகாலை இரண்டு இருபத்தைந்து!

மாபல் தரையில் படுத்ததால் இடுப்பு ஒடியப் போவது போல வலித்தது. இடக்கையை நீட்டவே முடியவில்லை. மேசை மீதிருந்த சாப்பாட்டை மூடி வைத்து விட்டு மின் விளக்கையும் அணைத்தவள் முன் மண்டபத்துக்கு வந்து சோபாவில் படுத்துக் கொண்டாள். தூக்கம் காணாமல் போனதை உணர்ந்தவளுக்கு சில மணி நேரத்துக்கு முன்பு நடந்ததெல்லாம் மூளையில் பொறி தட்டியது.

ஹனான்.

இரண்டாம் திருமணம்.

இன்னொரு மனைவி.

இன்னொரு குடும்பம்.

அவளது ஹனான் இனிமேல் அவளுக்கு மட்டும் சொந்தமாக இருக்கப் போவதில்லை.

ஹனானின் இரண்டாம் திருமணம் பற்றிய எண்ணம் இப்போது இல்லாது போயிருக்கும் என்று அவள் எண்ணியது தவறாகப் போய் விட்டது. அவ்வெண்ணம் அவன் மனதில் ஏதோவொரு இடத்தில் இருந்து தான் இருக்கிறது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவளை சாடுவதோடு சேர்த்து அதையும் கூறி விட்டான். கெட்டிக்காரன்!

இனி அவன் முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவென்றே ஜன்னாவுக்குத் தோன்றியது. அவன் ஏற்கனவே பெண் பார்த்து வைத்திருக்கும் போது அவள் பேச்சு எடுபடுமா என்ன?

காயம்✔️Where stories live. Discover now