பகுதி-11

7.2K 196 8
                                    

அடுத்து வந்த இரு மாதங்களில் அணுவும் கௌதமும் அவரவர் வீட்டில் தங்கள் காதலை கூறினர்.
கௌதம் வீட்டில் உடனே ஒப்பு கொண்டனர்...
அணு வீட்டில் சிறிது தயங்கினர்....பின் கௌதம் மற்றும் ரியா வீட்டினர் அணுவின் பெற்றோறுடன் பேசி சம்மதம் பெற்றனர்.
இந்த சம்பவங்களுக்கிடையில் ,
சரோஜா அம்மா பாரதியிடம் ரியாவின் போட்டோ ஜாதகத்தை முன்பே வாங்கி சென்றிருந்தார் மாப்பிள்ளை பார்க்க....பல வரன்கள் வந்து சென்றது. ரியா திருமணத்திற்கு தான் தயாராக இல்லை என அனைத்தையும் தட்டிக்கழித்தாள்...சில பெண்பார்க்கும் வரை வந்து நின்றன.

அணு வீட்டில் சம்மதம் வாங்கிய பிறகு இருவரும் சேர்ந்து ரியா வீட்டிற்கு வந்திருந்தனர்.
அனைவரும் இணைந்து பல கதைகள் பேசி பொழுதை கழித்தனர்.
மதிய வேளை....,
அம்மா பசிக்குது உங்க கையால செஞ்ச அனைத்து ஸ்பெஷல் அய்டத்தையும் இங்க இறக்குங்க என கௌதம் பாரதி அம்மாவிடம் கூறினான்....
பின் அனைவரும் சாப்பிட்டு ஓய்வெடுத்தனர்.

அப்போது கௌதம் தண்ணீர் பருக சமையல்  அறைக்கு வந்தான்... அங்கு பாரதி அம்மா பாத்திரம் கழுவி கொண்டிருந்தார்......
பின் கௌதம் பாரதி அம்மாவின் அருகில் வந்து நின்றான்.... கௌதம் உன்கிட்ட கொஞ்சம் பேசுனும்பா..-பாரதி.
சொல்லுங்கம்மா.... -கௌதம்.

அது...... ரியாவ பத்திதாம்பா.....
எத்தன வரன் வந்துருச்சு எதுக்குமே சம்மதிக்க மாட்டிங்கறா.... அப்படியே  அவள பொன்னு பார்கற வர வந்தாளும் கடைசியா ஏதாவது பேசி நிறுத்தரா.....

கேட்டா கல்யாணத்துக்கு தயாரா இல்லனு சொல்றா....
நீங்களாந்தாம்பா அவட்ட பேசி அவ மனச மாத்தனும்..... அவ யாரயாவது லவ் பன்றான கூட சொல்லுங்க....கல்யாணம் பன்னிவச்சுடலாம்.....சின்ன வயசுலருந்தே ஒன்னா இருக்கிங்க.... உனக்கு தெரியாம எதும் இருக்காது.. என தன் மனதில் உள்ள கவலைகளை கொட்டி தீர்த்தார் பாரதி.

இருங்கம்மா கவல படாதிங்க..... நா பார்த்துகிறேன்... நா போய் அவகிட்ட பேசறேன்.....என்று பாரதி அம்மாவிற்கு ஆறுதல் கூறி வெளியேறினான்......பின் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த ரியாவின் ரூமிற்கு வந்து.... ரியாவை எழுப்பி கார்டனிற்கு அழைத்து சென்றான்.

என்ன கௌதம் எதுக்கு தூங்கிட்டு இருக்கும்போது இப்டி எழுப்பி கூட்டிட்டு வர.... தூங்ககுள்ள எழுப்புனா பாவம் வந்து சேரும்... தெரியாத உனக்கு.... என விளையாடினாள் ரியா.....

உன் விளையாட்டலாம் ஓரங்கட்டு ரியா... நா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்....-கௌதம்.

ஹிம் பேசுங்க சார்..... சார் அப்படி என்ன பெருசா பேச போரிங்க......-ரியா.

ஆமா நீ ஏன் எல்லார்தையும் இப்படி கஷ்ட படுத்துற ரியா....என கௌதம் கூறியவுடன் ரியா ஷாக் ஆனாள் அவளின் கண் கலங்க ஆரம்பித்தன....

நா... நானா... நான் என்ன கௌதம் கஷ்டபடுத்தினேன்......என ரியா திக்கிய வார்த்தைகளுடன் கேட்டாள்.....

கௌதம் மனதிற்குள்...ஐம் சாரி ரியா நீ எவ்வளவு ஹர்ட் ஆவனு எனக்கு தெரியும்..... எல்லாம் தெரிஞ்ச நானே இப்படி பேசுனா நீ ஒடஞ்சு போயிடுவனு தெரியும்...பட் இதை எல்லாம் நா பேச வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்... எல்லாம் உனக்காகதான்.... உன் வாழ்க்க இப்படி ஆகறத என்னாலயும் பார்த்துகிட்டு இருக்க முடியாது....என நினைத்துக் கொண்டு பேச துவங்கினான்.....

ஆமா ரியா நாங்க எல்லாருமே உன்ன நெனச்சு எவ்வளவு கவல படுரோம் தெரியுமா... அம்மாக்கு உடம்பு சரியில்லாம போனது அவங்க ஒழுங்கா சாப்படாததுனால இல்ல... உன்ன நெனச்சு அவங்க கவல பட்டு சாப்படாம இருந்ததனால....
வீட்டுல எல்லாரும் கவலையா இருக்காங்கனா அதுக்கு நீ... நீ மட்டும்தான் ரியா காரணம்.....நீ இன்னும் சின்ன பொன்னு இல்ல ரியா... நாம பி.ஜி.  முடிச்சுட்டோம்....ஏன் இப்படி ஷெல்பிஷா இருக்க... நீ நினைக்கறது மட்டும் போதுமா......உன் வீட்டுல உனக்கு என்னென்ன எப்படிலாம் பன்னனுமுனு   கனவோட இருப்பாங்க.... ஆனா நீ என்ன அவங்களுக்கு பன்னிகிட்டிருக்க.....உனக்காக வாழ்ந்த அவங்களுக்கு இப்படி துரோகம் பன்னிகிட்டிருக்க.. போதும் ரியா எல்லார்தையும் இதோட நிறுத்திக்கோ.....என கௌதம் திட்டி முடிக்கவும் ரியா அவனை கட்டி அழவும் அணுவும், விக்கியும் அவர்களை தேடி வந்து அக்காட்சியை பார்க்கவும் சரியாக இருந்தது......

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Tempat cerita menjadi hidup. Temukan sekarang