பகுதி-28

6.2K 179 20
                                    

அனைவரும் இரவு வேளையில் அங்கு  சென்றவுடன் விக்கியின் நண்பன் ஹரி அவர்களை அழைத்து சென்றான்.....

அவர்களை பேப்ரிக் ஹோட்டலில் விட்டுவிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டு சென்றான்.

பின் அவரவர் அறையில் .... டயார்டில் அனைவரும் உறங்கினர்..

அந்த நாட்டின் டைமின் படி காலை எட்டுமணியளவில் ரியா ரூமின் காலிங் பெல்லை அமுக்கினாள் அணு.....
தூக்க கலக்கத்தில் வந்து திறந்த அவளிடம் அணு, ஹே என்ன ரியா இது மணி எட்டு ஆகுது இன்னும் இப்படியே நிக்கற.... சீக்ரம் போய் கிழம்பி வாங்க என கூறிவிட்டு அவளறைக்கு சென்றாள்.

பின் ரியா தூக்க கழக்கத்தில் உள்ளே நுழைந்தவள் அவள் போனை எடுத்து ஐந்து நிமிடம் கழித்து அலாரம் வைத்து நவீனின் அருகில் வைத்துவிட்டு, காபி ஆர்டர் செய்துவிட்டு.....குளிக்க சென்றாள்.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு அலார ஒலியால் படக்கென எழுந்த நவீன்
ஓ மை காட் 12.30 ஆகிடிச்சா ஆபீஸ் போக டைம் ஆகிடுச்செ என சுற்றி பார்த்தவன் அப்போதுதான் தான் பாரீஸ் வந்திருப்பதை உணர்ந்தான்......
அப்போ எட்டு மணி ஆகிடுச்சு என யோசித்தவன் காலீங் பெல் சத்தம் கேட்டு கதவு திறந்தான் , ரூம் சர்விஸ் பாய் காபி எடுத்து உள்ளே வைத்துவிடடு கிழம்பினான்..
குளித்து ரியா வெளியில் வந்தவுடன் இருவரும் ஒரு பார்வையை தவிர வேறு எதையும் பகிரவில்லை.
பின் ரியா காபி கப்பில் காபீ ஊற்றீ குடித்துக்கொண்டிருப்பதை பார்த்து கொண்டு , கிராதகி ஒரு வார்த்த காபீ குடிங்கனு கேட்க தோனுதா அவளுக்கு என நினைத்து அவன் அவளை பார்க்க... உனக்கு நான் ஆர்டர் பன்னதே பெருசுடா என அவள் நினைக்க.... பின் இவர்களின் மைன்ட் வாய்ஸ் வார் அணு மற்றும் கௌதமால் முடிந்தது.

பின் அனைவரும் கிளம்பி பிரேக்பஸ்ட் முடித்து ஊர் சுத்த ஹரியுடன் கிழம்பினர்.

லார்வே பிரமிட்டிற்கு சென்றனர்..... கண்ணாடி மற்றும் மெட்டலால் செய்யப்பட்டு பிரமாண்டமாய் உயர்ந்திருந்து .... அதையடுத்து லாவ்ரே மியூசியம்..... அதில் பிரெஞ்சு போர்ச்சுகீசிய கட்டடகலை பல நாடுகளின் திறமைவாய்ந்த ஓவியங்கள் , மோனாலிசாவின் ஓவியம் அந்நாட்டின் கலாச்சாரத்தை கூறும் வகையில் பல கைவண்ணங்கள் தனித்தனி பிரிவுகளாக காணப்பட்டன..
பின் இரவு டின்னருக்கு அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிற்கே சென்றனர்....டின்னர்முடிந்து பப்பிற்கு சென்று பின் அவரவர் ரூமிற்கு சென்றனர்...
இவ்வாறாக கய்மெட் மியூசியம் நாட்ரே டேம், வெர்மிலான் லேக்,ஜூமா பீச், ஜாடீங் லுபாரீஸ் ராயல் அன்ட் டடீயர் லுடாட்ஸ் வின்டேஜ் ஷாப்பிங் மால் என அனைத்து இடங்களுக்கும் சென்று அணுவும் கௌதமும் ரொமாண்டிக்காகவும், ரியாவும் நவீனும் கிளாஸ் ஆப் கிளான்ஸ்ஸாகவும் ஏழு நாட்களை கழித்தனர்.....
எட்டாம் நாள் அனைவரும் கிழம்பி பிரேக் பஸ்ட் முடித்து, அமூஸ்மென்ட் பார்க் செல்ல திட்டமிட்டனர்... ஆனால் ரியாவின் காலில் திடிரென சுலுக்குபிடித்ததால் அனைவரும் ரெஸ்ட் எடுக்க முடிவெடுத்தனர்.....
அவளுக்கு டிரிட்மென்ட் செய்ய மருத்துவ பொருட்களை வாங்க கௌதமும் நவீனும் வெளியில் சென்றனர்..... அப்போதுதான் பெண்களுக்கான கேர்ள்ஸ் டைம் கிடைத்தது....

அணு ரியாவிற்கு வலி குறைய தற்காலிகமாக ஆயின்மென்ட் போட்டுக்கொண்டே ரியா நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்.....
நீ நிஜமாவே நவீன் மேல கோபமா இருக்கயா???? இல்ல நடிக்கறயா??? நானும் உங்கள பார்த்துகிட்டுதான் இருக்கேன் இரண்டு பேர் கண்ணுலயும் காதல் அருவியா நிரம்பி வலியுது..... ஆனா நீ திடீர்னு விலகிடுர .... இந்த அளவுக்கு நீ அவர்மேல கோபமா இருக்கனா??? அப்படி என்னதான் நடந்தது உங்களுக்குள்ள... எனக்கு யோசிச்சு மண்டயே வெடுச்சுறும்போல இருக்கு..... என்ன நடந்ததுனு சொல்லிடுமா என கேட்க ரியாவும் கடந்த காலத்தை பற்றி கூற ஆயத்தமானாள்......

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon