***4****

4K 156 10
                                    

  மட்சியா என்னடி என்னைவிட்டுட்டே சாப்பிட வந்துவிட்டாய்....

    இல்லை மதனா.. கொஞ்சம் மைன்ட் சரியில்லை... அதான் தனியா இருக்கலாம்னு வந்தேன்... சாப்பிடலை டி. சாப்பிடறப்போ உன்னை கூப்பிடலாம் என்று யோசித்துதான் வந்தேன்.

   ம். அதானே பார்த்தேன்... எங்க என்னை விட்டு எல்லாவற்றையும் உண்டு முடித்துவிடுவாயோ என்று பயந்துவிட்டேன் என்று சிரித்தாள்.

     பதிலுக்கு புன்னகைத்துவிட்டு உணவினைக் கிளற ஆரம்பித்தாள். மனதினுள் ஏதேதோ எண்ணங்கள் ஊடுறுவியது....சிலரின் உருவங்கள் வந்து வந்து மறைய, கடைசியாய் சிவ்னேஷ் மட்சியாவின் தந்தை முன் கத்தியுடன் வெறித்தனமாய் பாய்வதில் முடிய நோ... என்று அலறி மயங்கினாள்.

   ஒன்றும் புரியாமல் மட்சியா என்னவாகிற்று என்று கத்தினாள் மதனா...
        தூரத்திலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் பதறியடித்து ஓடி வந்தான்.

    மட்சியா என்னாச்சு.... மதனா மட்சியாவிற்கு என்னவாயிற்று... ஏன் என்னாச்சு என்ன சாப்பிட்டாள்... மட்சியா எழுந்திருடா.. என்று மூச்சுவிடாமல் பேசினான். இடைவிடாமல் கை கால்களை மாற்றி மாற்றி தேய்த்துவிட்டான். முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பினான். அவளிடம் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது.

  மதனாவோ அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.

      சிவ்னேஷோ கண நேரமும் தாமதிக்காமல் அவளை குழந்தையைப் போல தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பினான். ஏய் மதனா... என்ன விழித்துக் கொண்டிருக்கிறாய் என்னுடன் வா என்று அவளை நினைவு பெறச் செய்தான்.

       அருகிலிருந்த ஒரு மருத்துவமனையில் அட்மிட் செய்தான்.
    
      மிஸ். மட்சியாவிற்கு ஒன்றுமில்லை. அவர் நன்றாகவே இருக்கிறார். ஆனால் மனதளவில் மட்டும் கொஞ்சம் ஸ்ட்ரெஸாக இருக்கிறார். அதனால் ஏற்ப்பட்ட மயக்கம் தான் இது. இப்போதைக்கு நான் மெடிசின்ஸ் எழுதித் தருகிறேன். அவர்களிடம் பேசி அவர் மனதில் இருப்பதை அறிய முயற்சியுங்கள் என்று டாக்டர் அவருடைய அறிவுரையை வழங்கினார்.

     ம் ஓகே டாக்டர். நாங்க மட்சியாவை பார்க்கலாம் அல்லவா?

   ஸ்யூர்.ஸீ ஈஸ் பைன் நவ். நீங்க பார்கலாம்.

      தாங்க்யூ டாக்டர்.

   மதனா கம்... என்று அவளையும் அழைத்துக் கொண்டு மட்சியா இருந்த அறைக்குச் சென்றான்.

       அவள் அமைதியாய் படுத்திருக்க.... தலையை மெதுவாய் வருடினான். அவனைப் பார்க்க மதனாவிற்கே பாவமாய் இருந்தது. இவ்வளவு அன்பு வைத்திருக்கின்றானே... அதுவும் அவனுக்கு பதிலளிக்காமல் அலைய வைக்கும் ஒரு பெண்ணிர் மீது..! ஆச்சரியமாய் பார்த்தாள்.

    மட்சியாவிற்கு என்னவாகியிருக்கும்... நம்மிடம் எதையும் மறைக்காமல் கூறுவாளே என்று தன் தோழியின் மீதும் அவள் இரக்கம் படர்ந்தது.

   மெதுவாக கண் விழித்தாள். புதிதாகப் பிறந்த குழந்தை தன் தாயைத் தவிர மற்றவர்களைப் பார்த்து அழகாய் விழிப்பதைப் போல ஒன்றும் புரியாமல் விழித்து விழித்துப் பார்த்தாள்.

      சிவ்னேஷைப் பார்த்து நடுங்கினாள்... மதனா.. மதனா.. என்று தன் தோழியை அழைத்தாள்.

     இங்க தான்டி இருக்கேன். பயப்படாதே....இப்போ எப்படி இருக்க மட்சியா?

      ம்... தலைதான் கொஞ்சம் வலிக்குது. ஆமா ஹாஸ்பிட்டல்க்கு எப்படி வந்தோம்...

    சிவ்னேஷ் தான்டி தூக்கிட்டு வந்தாரு. எப்படி பதறினோம் தெரியுமா?

    மறுபடியும் சிவ்னேஷ் பெயரைக் கேட்டு அஞ்சினாள்.

    என்ன தான்டி உன் மைன்ட்ல அப்படி இருக்கு... நீ அலறினதைக் கேட்டு எப்படி பயந்தேன்னு தெரியுமா? அப்படி என்ன ஸ்ட்ரெஸ் உனக்கு?? என்று கண் கலங்கப் பேசினான்.

    அவளுக்கே பாவமாய் இருந்தது. ஆனாலும் உள்ளூரப் பயந்தாள்.

    

     

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now