***9***

3.1K 132 5
                                    

         நான் கொஞ்ச நேரம் தான் தூங்கறேன்னு சொன்னேன்... அதுக்குள்ள நீங்க என்னை விட்டு சாப்பிடவே முடிவு பன்னிட்டீங்களா??

      வாடி.... வாயாடி.... உன்னை விட்டுவிட்டு நானும் உங்க அப்பாவும் எப்பொழுதாவது சாப்பிட்டிருக்கிறோமா?.. எல்லா உணவையும் எடுத்து வைத்துவிட்டு உன்னைக் கூப்பிடலாம் என்று நினைத்தாள் அதற்குள் கேள்வியப் பாரு... என்று மகளின் கண்ணத்தை செல்லமாய் இடித்தார்.

     அய்யோ... போம்மா... என்று வலிப்பதைப் போல பாவனை செய்து, எனக்குத் தெரியாதா... என் அம்மாவைப் பற்றி...

     ஆமமா.... உனக்கு நல்லா தெரியும் பாரு.....

      அப்பா... நீங்கள் சொல்லுங்கள்... எனக்கு உங்கள் இருவரைப் பற்றி தெரியும் தானே...

    ஆமாம்டா... உன்னைவிட வேறு யார் எங்களை புரிந்து கொள்ள இருக்கிறார்கள்.... நீயே எங்கள் உலகம்.... யாருமில்லாமல் தனித்து வாழ்ந்து வந்த எங்கள் வாழ்வில், நாங்கள் வாழ்வதற்கு அர்த்தமாய் வந்தவள் நீ தானடா.... நாங்கள் எப்பவோ செய்த புண்ணியம் தான் நீ கிடைத்தது.

   அப்பா.... உங்களை மாதிரி பேரன்ட்ஸ் கிடைக்க நான்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

     சரி சரி... போதும் புகழ்ந்தது.. முதலில் சாப்பிடுங்கள், என்றார் மட்சியாவின் தாயார்.

   அப்பா... இன்று உங்கள் வேலை எப்படி இருந்தது என தொடங்கி... சாப்பிட ஆரம்பித்தனர். அவரும் தன் மனைவி, மகளிடம் ஒன்றுவிடாமல் கூறி முடித்தார்.... இது வழக்கமாக நடக்கும் விசயம் தான். ஆனால் மட்சியாவின் நிலைதான் படு திண்டாட்டமாக இருந்தது இன்று...

   மற்ற நாட்களில் சிவ்னேஷைப் பற்றி அதிகம் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் மற்ற வேலைகள் இருந்ததால் அவனைப் பற்றி பேசாமல் மற்ற விசயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்வாள். ஆனால் இன்றோ நாளில் பாதி அவனுடன் இருந்ததால் அதை மறைத்துக் கூற பாடாதபாடு பட்டாள் என்றுதான் கூற வேண்டும்.

    உண்டு முடித்து சிறிது நேர உரையாடலுக்குப் பின் மூவரும் தூங்கச் சென்றனர்.

     மட்சியா அறைக்குள் நுழையும் பொழுதே அவளது போன் ஒலிப்பது கேட்டது.. உடனே அவசரமாக ஓடி வந்து எடுத்தாள். புதிதாக இந்த நேரத்தில் அழைப்பு வருகிறதென்றால் சிவ்வாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தாள்.
    ஒரு பெண்ணிற்க்கு இந்த நேரத்தில் கால் செய்வது தவறு என்பது கூடவா தெரியாது...?

     அது எனக்கு தெரியும்டி என் அருமை பொண்டாட்டி.... யாரோ ஒரு பெண்ணிற்க்கு கால் செய்வதுதான் தவறு... ஆனால் நான் என் பொண்டாட்டிக்குத் தானே கால் செய்தேன்... இது எவ்வாறு தவறாகும்...?

     பொண்டாட்டியா?? என்னடா.. ரொம்ப பேசுற போல?

    நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே டி....

    அது சரி...ஒருவேலை நான் உன்னைக் காதலிக்காமல் இருந்திருந்தால் என்னடா செய்திருப்பாய்?

    அதான் சொன்னேனே.... காத்திருப்பேன் என்று...

     கடைசி வரை காதலே வரவில்லை என்றால்?....

     அடுத்த ஜென்மம் எடுத்து வந்து உனக்காக காத்திருப்பேன்...

    நல்லா பேசுறடா...

  இல்லைடி உண்மையைத்தான் சொல்கிறேன். நீ இல்லாமல் நான் இல்லை... உன்னை பார்க்கும் போதெல்லாம் என் மனம் எப்படி தவிக்குமென்று உனக்குத் தெரியாதுடி. உன்னுடன் வாழ வேண்டும்... உன்னுடன் மட்டும்... உனக்காக மட்டும்...என்று என் மனம் சொல்லிக் கொண்டே அதிவேகமாய் துடிக்கும். இதயத்தில் ஏதோ ஒரு பயம்...நீ கிடைக்காமல் போய்விட்டால் என்று.. வார்த்தைகள் இல்லை.... அந்த உணர்வுகளை வெளிப்படுத்த...

     மறுமுனையில் மட்சியா வாயடைத்துப் போயிருந்தாள். சிவ்னேஷைப் பார்க்கும் போதெல்லாம் அவள் எதை உணர்ந்தாளோ... அதையே இப்பொழுது அவன் பேசிக் கொண்டிருக்கின்றான்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now