♥*18*♥

2.3K 122 19
                                    

    சிவ் என்னாச்சுடா? ஏன் இப்படி உன் உடம்பு அனலா இருக்கு? காய்ச்சலா கொதிக்குதுடா... ஹாஸ்பிட்டல் போனியா இல்லையா?? திடீரென்று என்னவாகிற்று? நீ எதுக்காகடா இவ்வளவு தூரம் வந்த..?

   ஏய்...ஒன்றுமில்லைமா.. நீ டென்சன் ஆகாதே டா...

   என்னால் தான்.. என்னால் தான் நீ இங்கு வந்தாய்.. ஸா..ஸாரிடா.. வா.. முதலில் மருத்துவமனைக்குச் செல்லாம்... பிறகு எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம்.

    ரிசப்சனில் இருந்தவாறே டீம் மேனேஜருக்கு கால் செய்து, எமர்ஜென்ஸி சார் நான் லீவ் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறி பதிலுக்கு காத்திராமல் போனை வைத்தாள். அடுத்து மதனாவிற்கு கால் செய்து மதனா, நான் வெளியில் கிளம்புகிறேன் நீ என் பேக்கை மாலை எடுத்துக் கொண்டு வந்துவிடு, நான் வீட்டிற்கு செல்லும் வலியில் வந்து வாங்கிக் கொள்கின்றேன் என்றாள்.

     ஏய் மட்சியா.. என்னாச்சுடி.. என்று கேட்டு முடிப்பதற்குள் அவள் போனை வைத்திருந்தாள். மறுபடியும் போன் செய்தாள்... பலனேதும் இல்லாமல் போக... கோபத்தோடு மாலை பேசிக் கொள்ளலாம் என்று வேலையைத் தொடங்கினாள் மதனா.

      சிவ்வை அழைத்துக் கொண்டு ஆட்டோ ஒன்றில் மருத்துவமனைக்குப் புறப்பட்டாள்.

  அவனால் முடியவில்லை என்பது அவனது தோற்றத்தில் நன்றாகத் தெரிந்தது.. சிவ் ஏன்டா இப்படி பன்ற? ஒரு வார்த்தை உடல்நிலை சரியில்லை என்றிருந்தால் நான் பார்க்க வேண்டும் என்று கேட்டிருக்கவே மாட்டேன்டா..

     மட்சியா.. நீ பயப்படும் அளவிற்கு ஒன்றுமில்லைம்மா.... சாதாரணக் காய்ச்சல் தான்..

     போடா... சாதாரணக் காய்ச்சலுக்குத் தான் உடம்பு இப்படி கொதிக்கிறதா... நீ அமைதியாக இரு எதுவும் பேசவேண்டாம்.

        நேரம் ஆக ஆக அவன் மிகவும் சோர்ந்து போனான். அவள் அவனைத் தன் தோள் மீது சாய்த்துப் பிடித்துக் கொண்டாள். மருத்துவமனையை அடைந்ததும் அவனைப் பிடித்தவாறே மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now