♡°♥°20°♥°♡

2.4K 115 13
                                    

      பைத்தியம் பிடிப்பதைப் போல் உணர்ந்தாள் மட்சியா...
என்ன நடக்கிறது? கண்முன் தோன்றும் காட்சிகள் ஏன் என்னை இவ்வளவு அச்சுறுத்துகிறது? ஒருவேளை எனக்கு பைத்தியமோ?? பிறகு எப்படி நிதானத்துடன் இருக்கின்றேன். என் கேள்விகளுக்கு எப்பொழுது விடை கிடைக்கும்?? அழுது புலம்பினாள்.
   
      வெகு நேர மனப் போராட்டத்திற்குப் பிறகு தெளிவாய் முடிவெடுத்தாள். என்னவாகினாலும் சரி முதலில் சிவ்விடம் என் கனவுகளைப் பற்றியும் கண் முன் தோன்றி அச்சுறுத்தும் விசயங்களையும் கூற வேண்டும். நிச்சயம் அவன் எனக்கு உதவுவான். ஆனால் அதற்கு முன் இன்று சிவ் வீட்டிற்கு சென்றதையும், என் காதலைப் பற்றியும் அம்மா அப்பாவிடம் கூறியே ஆக வேண்டும்..
வேகமாய் எழுந்து முகம் கழுவிக் கொண்டு கீழே சென்றாள்.

     காலையில் தவறவிட்ட செய்தித் துணுக்குகளைப் படித்துக் கொண்டிருந்தார் மட்சியாவின் தந்தை. இரவு உணவினைத் தயார் செய்து அதை டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் அவளின் தாய்.

        எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல் உதட்டினைக் கடித்துக் கொண்டு இருந்தாள்.

    என்னம்மா... சிவ்னேஷ் இப்போ எப்படி இருக்காரு?

    அப்..பா....

    இப்போ பரவாயில்லையா டா??

    உங்களுக்கு....எ..எப்படி..

   அட என்னடா நீ... அப்பா ஆபிஸ் பக்கம் தான் நீ ஆட்டோல போனங்கறது கூட உனக்கு தெரியலையா?? அப்பா ஆபிஸ் முன்னாடியே இறங்கி டிபன் வாங்கினதை மறந்துடியா?

    அப்பொழுதுதான் மட்சியாவிற்கு நினைவு வந்தது. சிவ்வின் வீடு தன் தந்தை பணிபுரியும் அலுவலகத்தை தாண்டி தான் இருந்தது என்பது.

    ஸா..ஸாரி அப்பா... அது... நான் அவசரத்துல.. மறந்துட்டேன்... பேச முடியாமல் உளறினாள்.

    ம் பரவாயில்லை டா. நீ டென்சனா இருந்ததைப் பார்த்ததுமே புரிந்து கொண்டேன். அதான் நான் கூப்பிடவில்லை.

     அப்பா.. நான் இன்னிக்கு ப்புல் டே அவர் கூடதான் இருந்தேன். அவரைப் பார்த்துக் கொள்வதற்காக. அன்ட் நானும்.. அவரும்... சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Wo Geschichten leben. Entdecke jetzt