***10***

3K 127 7
                                    

        ஏய் மட்சியா.... என்னவாகிற்று..? நான் பேசிக் கொண்டே இருக்கின்றேன் நீ அமைதியாக இருக்கின்றாய்...

     அ...அது.... ஒன்றுமில்லை...நீ பேசுவதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

       பிறகு ஏன் அமைதியாக இருக்கின்றாய்? ஏதும் பதில் பேச மாட்டாயா?

      என்ன கூறுவதென்று தெரியவில்லை. என் மனதில் இருக்கும் விசயங்களை அப்படியே சொல்கிறாய்... அவ்வாறிருக்க நான் என்ன பேசுவது..?

    என்னடி சொல்கிறாய்...

   ஆமாம்... எனக்கு உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் என்ன தோன்றுமோ அதையே நீயும் சொல்கிறாயே... என்று பேசிக் கொண்டே ஜன்னல் திட்டில் ஏறி வசதியாய் அமர்ந்து கொண்டாள்...

        இதுதான் நமக்குள்ள இருக்க வேவ்லென்த்... உனக்கு நான் தான்... எனக்கு நீ தானு முடிவு பண்ணி தான் அந்த கடவுள் நம்மள படைச்சிருக்காரு... அதான் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக் கொள்ளும் போது இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி தோணிருக்கு டியர்....

    ம் நீ சொல்வதும் உண்மை தான்....

    ம்... எனக்கு உன்னை பார்க்கனும் போல இருக்கு டா...

    என்ன...? இப்போவா?? எப்படி டா..? மணி என்னனு பார்த்தியா..? எல்லோரும் தூங்கிட்டு இருக்காங்க டா....

    ம்.. பரவாயில்லை டி... நான் சும்மா பார்த்துவிட்டு மட்டும் போகின்றேனே....

     ஹேய் லூசாடா... நீ எப்படிடா இந்த நேரத்தில வந்துட்டு போவ...

      அதெல்லாம் உனக்கெதற்கு "ம்" என்று சொல் உன் கண் முன்னே நிற்பேன்...

    அப்படியா சார்.... ம்.....

     ம்.. ஆ... இதோ வந்துட்டேன்..

   டேய் நான் என்ன சிறு குழந்தையா... இதோ வந்துட்டேனு சொன்னதும் நம்பிவிடுவதற்கு...?

      நீ எனக்கு எப்பவும் குழந்தை போலத் தான்டி... ஆனால் நான் எப்பொழுதும் உன்னை ஏமாற்ற மாட்டேன். உன் கண்களைத் திறந்து நன்றாகப் பார் நான் இங்கு தான் நிற்கின்றேன்.

    என்ன..! என்று துள்ளி எழுந்தாள்.. ஜன்னலின் வழியே நன்கு எட்டிப் பார்த்தாள்... அந்த காரிருளில் உருவம் ஒன்று அவளைப் பார்த்து கையசைத்தது... அவன் கூறியது உண்மைதான்.. அவன் தான்.. அவனேதான் அங்கு நின்று கொண்டிருந்தான்.

   ஏய் நிஜமாகவே நீ... நீதானா??

    மட்சியா.... உன்னைப் பார்த்து வேறு யாராவது கையசைத்து விடுவார்களா என்ன? இல்லை.. நான் தான் விட்டுவிடுவேனா..!!?

      எப்படி டா...? இங்கு எப்பொழுது வந்தாய்..? எதற்காக வந்தாய்??

     முன்பே வந்துவிட்டேன்... உன்னைக் காண்பதற்காகத் தான் வந்தேன்.

    பிறகு ஏன் இவ்வளவு நேரமாகக் கூறவில்லை?

    இல்லைடி... இப்படி உங்கள் வீட்டினருகில் வந்து நின்றால் நீ எவ்வாறு எடுத்துக் கொள்வாயோ என்று சிறிது பயமாக இருந்தது.. அதனால் தான் இவ்வளவு நேரமாகக் கூறவில்லை.

     ம்.. ம்.. எனக்கு நீ தெரியவே இல்லை தெரியுமா? அவ்வளவு இருட்டாக இருக்கின்றது.

     அப்போ மேடம்கும் என்னைப் பார்க்கனும்??

    லைட்டா... என்றாள் வெட்கத்துடன்.

  ம் ஒருநிமிடம் என்று தன் மொபைலில் ஸ்பீக்கரை ஆன் செய்து கொண்டு, டிஸ்பிளே லைட்டை ஒளிரச் செய்தான். போதுமா டி....

    ம்... ஓகே ஓகே.. என்று ஜன்னல் கம்பிகள் மீது தலை சாய்த்தாள்.

    ஓய் நான் பார்க்க வேண்டாமா....உன் அறை விளக்கின் வெளிச்சத்தினை அதிகமாக்கு...

  ம்.. ஓகே.... என்று ஓடிச் சென்று சன்னமாய் ஒளிரும் விளக்கினை அனைத்து மற்றொரு மின் விளக்கினை ஒளிரச் செய்து மறுபடியும் ஜன்னல் அருகில் வந்து நின்றாள்.

    சூப்பர் டி.... இப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்றிருக்கிறது...

   எனக்கும் தான்டா...

  இருவரும் இரவென்றும் பாராமல் தொலைபேசியை காதில் வைத்த வண்ணம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now