***6***

3.4K 139 12
                                    

          டாக்டர் இங்கதான் வாங்க சீக்கிரம் என்றவாறே மதனா உள்ளே வந்தாள்.

டாக்டர்... டாக்டர்.... சிவ்...சிவ்க்கு என்னாச்சு... அவன் மயங்கிவிட்டான்... சி...சீக்கிரம் செக் பண்ணுங்க ப்ளீஸ்..

    நீங்க முதலில் அமைதியாக இருங்கள்... கொஞ்சம் வெளியில் இருங்கள்... சப்தம் போடாதீர்கள்.

    மட்சியா வாடி.. நாம வெளில வெயிட் பண்ணுவோம். அவங்க சிவ்னேஷ்ஸ  செக் பண்ணட்டும். அவருக்கு ஒன்னும் ஆகாதுடி..

   இல்ல மதனா.. அவனுக்கு நிறைய பிளட் லாஸ் ஆகிடுச்சி.. எனக்கு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

   சரி மட்சிய.. நாம வெளில போனாதானே அவங்க ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும். கம் வித் மீ மா... கம்.. என்று அவளை வெளியே அழைத்து வந்தாள்.

     சிறிது நேரத்திற்குப் பிறகு வெளி வந்த மருத்துவரிடம் மூச்சு விடாமல் பேசினாள்.

    சிவ்னேஷ் எப்படி இருக்காரு? அவருக்கு எதும் இல்லைல டாக்டர். ஏன் மயங்கிட்டாரு?? நான் எவ்வளவு முயற்சி செய்தும் அவர் எழவே இல்லையே ஏன்...

      மிஸ்.மட்சியா... காம் டவுன். அவருக்கு ஒன்றுமில்லை. பிளட் லாஸ் கொஞ்சம் அதிகமானதால் ஏற்பட்ட மயக்கம் தான். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் போதும் நார்மல் ஆகிடுவாரு. இனிமேல் இந்த மாதிரி முட்டால் தானாமா யோசிக்காமல் இருக்க ஒரு கௌன்ஸ்லிங் கூட்டிட்டு போங்க.

     ஒ...ஓகே டாக்டர். சிவ்னேஷ நான் பார்க்கலாம் அல்லவா?

    ம் ஸ்யூர்... பட் டிஸ்ட்ரப் பண்ணாமல் பாருங்கள். பெயின் ரிலீப் கொடுத்திருக்கோம். இன்னும் சற்று நேரத்தில் அவர் கண் விழித்துவிடுவார்.

      தங்க்யூ டாக்டர்....
   மதனா வா சிவ்னேஷ பார்கனும் உடனே என்று நிக்காமல் ஓடினாள்...

    ஹேய் மட்சியா.. பொறுமையா போ... விழுந்துவிடுவாய்.

       கையில் கட்டுடன் கிடந்தவனைக் கண்டு மனம் தாழாமல் அழுதாள். என்னால் தானே உனக்கு இந்த நிலைமை.... என்னை மன்னித்துவிடு சிவ்னேஷ். நான் உன்னிடம் உண்மையைக் கூறியிருக்க வேண்டும். ஸாரி.. என்று அவனருகில் அமர்ந்து அழுதாள்.

      எனக்கு ஒன்றுமில்லைமா.... என்றவாறு அவள் தலையைக் கோதினான்.

   சிவ்னேஷ்..... உனக்கு ஒன்னுமில்லைல? நா...நான் ரொம்ப பயந்துட்டேன்... இப்படியே செத்தாலும் ஆனந்தம் என்று கண்களை மூடிவிட்டாய்.....

       உன்னை அழ வைத்துவிட்டு நான் எப்படிடா போவேன்? நீ அழுதால் என்னால் தாங்கிக் கொள்ள முடியாதம்மா...

       லவ் யூ சிவ்....லவ் யூ ஸோ மச்..

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now