♥■□29□■♥

2.1K 110 34
                                    

     பளிச்சென்று மின்னும் பாத்திரத்தில் வெண்ணிறத்தில் பால் பொங்கி வழிய அனைவரும் மகிழ்சியுடன் அந்த வீட்டில் தங்களுடைய தொழிலைத் தொடங்கினர்.
   வேலை நேரம் முழுவதும் இந்த வீட்டில் கழித்தனர். தூங்குவதற்கு மட்டுமே பழைய வீட்டிற்குச் சென்றார்கள். நாள் முழுவதும் இங்கு வேலை சரியாக இருந்தது. சதி அந்த வீட்டிற்குச் செல்வதற்கே வாய்ப்பில்லாமல் போனது. இப்படியே நாட்களும் கடந்தோடின. சதியின் தந்தையும் மாறவில்லை. இவர்களின் அன்பும் அதிகமானது. சதியில்லையென்றால் அவனுக்கு அன்று எதுவும் புரியாது. எதையோ இழந்ததைப் போலவே இருப்பான் அவளைக் காணும் வரை. அவளுக்கோ அவன் இல்லாமல் அவள் இதயம் கூட துடிக்காது என்பது போலத்தான்.

       ஈஸ்வரின் பிறந்தநாள் வந்தது. அன்று வேலை எதுவும் வேண்டாம் என்று முடிவு செய்து அன்று அவர்களது பழைய வீட்டிலேயே இருக்க முடிவு செய்திருந்தனர்.

      ஈஸ்வருக்கு ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். இரவெல்லாம் விழித்து ஒரு யோசனையோடு தான் வந்திருந்தாள்.

   அனைவரும் ஈஸ்வரின் பிறந்தநாளை பண்டிகையாகக் கொண்டாடினர். ஏதோ ஒரு வகையில் அனைத்தையும் இழந்தவர்களுக்கு அவனால் ஒரு குடும்பமும், கவுரவமாக வாழும் சூழ்நிலையையும் கொடுத்தவனின் பிறந்தநாள் அவர்களுக்கு பண்டிகையை விடப் பெரியது. வீட்டையே அலங்கரித்து வைத்திருந்தனர். அறுசுவை உணவு, இனிப்புகள், பலகாரம் என தயாரித்துக் கொண்டே இருந்தனர்.
வீடே கோலாகலமாக இருந்தது.

       அவன் கண்களைத் திறக்கும் போதே அவள் கண்முன் இருந்தாள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈஸ்வர் என்று கையில் பூங்கொத்துடன் நின்றாள்.

       ஓய் என்னடி காலைலயே....

    காதுல விழலையா??? ஹேப்பி பர்த் டே டியர் என்று பூங்கொத்தை நீட்டினாள்.

         அவள் கைகளைப் பிடித்து இழுக்க அவன்மீது சாய்ந்தாள்.

    டேய்... உன்னை என்று அவனை அடிப்பது போல்அவள் பாவனை செய்ய,

உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....Where stories live. Discover now